• Feb 06 2025

வடிவேல் சுரேஷை வெளியேறுமாறு உத்தரவு: அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

Chithra / Dec 11th 2024, 8:04 am
image


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் கூறியுள்ளார்.

வடிவேல் சுரேஷ் அங்கிருந்து வெளியேறாமல், அநீதியாக செயற்பட்டால் தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க, தலா 28 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது கூறியுள்ளார்.

வடிவேல் சுரேஷை வெளியேறுமாறு உத்தரவு: அமைச்சர் விடுத்த எச்சரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் நேற்று நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் கூறியுள்ளார்.வடிவேல் சுரேஷ் அங்கிருந்து வெளியேறாமல், அநீதியாக செயற்பட்டால் தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க, தலா 28 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement