• May 02 2024

புறக்கணிக்கப்படும் வன்னி! யாழிலேயே இடமாற்றங்களை பெற்றுவரும் உத்தியோகத்தர்கள் - பாராமுகமாக இருக்கும் வடக்கு மாகாண சபை samugammedia

Chithra / May 4th 2023, 4:53 pm
image

Advertisement

யுத்தத்தினால் பாதிப்புற்று தற்போது மீண்டுவரும் பெருநிலப்பரப்பில் வடக்கு மாகாண சபையின் அசண்டையீனங்களால் அபிவிருத்திகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. 

வருடாந்த இடமாற்றத்தில் வன்னிக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சார்ந்த பெரும்பாலானா உத்தியோகத்தர்கள் இதுவரை கடமைக்கு அறிக்கையிடாது யாழ்ப்பாணத்திற்குள்ளேயே இடமாற்றங்களை பெற்று வருகின்றனர்.

இதனால் ஏற்கனவே ஆளணி வெற்றிடங்கள் காணப்பட்ட வன்னி இப்போது இடமாற்றத்தில் யாழ்ப்பாணம் செல்வோர் விடுவிக்கப்பட்ட நிலையில் பதிலீடாக வருவோர் வராததனால் பெரிதும் பாதிப்புக்க உள்ளாகியுள்ளது.

அது மட்டுமல்லாது யாழுக்குள் பெருமளவு உத்தியோகத்தர்கள் உள்ள நிலையில் விசேட தரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களும் இங்கு கடமையேற்கவில்லை.

இதற்கு வடக்குமாகாணசபை உயர்பீடங்களும் ஆதரவு வழங்கிவருவதாக அறியமுடிவதுடன், ஆளணி இல்லாத இடங்களில் சம்பளமும் வழங்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

நியமனங்கள் அனைத்தும் வடக்குமாகாணசபையின் எப்பாகத்திலும் சேவையாற்றவேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இவர்களை விடுவிக்க வேண்டிய அதிகாரிகளும் விடுவிக்கவில்லை இது தொடர்பாக ஆளுநரும் பாராமுகமாக இருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புறக்கணிக்கப்படும் வன்னி யாழிலேயே இடமாற்றங்களை பெற்றுவரும் உத்தியோகத்தர்கள் - பாராமுகமாக இருக்கும் வடக்கு மாகாண சபை samugammedia யுத்தத்தினால் பாதிப்புற்று தற்போது மீண்டுவரும் பெருநிலப்பரப்பில் வடக்கு மாகாண சபையின் அசண்டையீனங்களால் அபிவிருத்திகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. வருடாந்த இடமாற்றத்தில் வன்னிக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சார்ந்த பெரும்பாலானா உத்தியோகத்தர்கள் இதுவரை கடமைக்கு அறிக்கையிடாது யாழ்ப்பாணத்திற்குள்ளேயே இடமாற்றங்களை பெற்று வருகின்றனர்.இதனால் ஏற்கனவே ஆளணி வெற்றிடங்கள் காணப்பட்ட வன்னி இப்போது இடமாற்றத்தில் யாழ்ப்பாணம் செல்வோர் விடுவிக்கப்பட்ட நிலையில் பதிலீடாக வருவோர் வராததனால் பெரிதும் பாதிப்புக்க உள்ளாகியுள்ளது.அது மட்டுமல்லாது யாழுக்குள் பெருமளவு உத்தியோகத்தர்கள் உள்ள நிலையில் விசேட தரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களும் இங்கு கடமையேற்கவில்லை.இதற்கு வடக்குமாகாணசபை உயர்பீடங்களும் ஆதரவு வழங்கிவருவதாக அறியமுடிவதுடன், ஆளணி இல்லாத இடங்களில் சம்பளமும் வழங்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியமனங்கள் அனைத்தும் வடக்குமாகாணசபையின் எப்பாகத்திலும் சேவையாற்றவேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இவர்களை விடுவிக்க வேண்டிய அதிகாரிகளும் விடுவிக்கவில்லை இது தொடர்பாக ஆளுநரும் பாராமுகமாக இருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement