• Jan 13 2025

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் : ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்

Tharmini / Jan 2nd 2025, 3:26 pm
image

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டமானது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைதொடர்பாக, கணகராயன்குளம் தெற்கு அபிவிருத்தி சங்கத்தின் காணியை பொலிஸாரின் பாவனையில் இருந்து விடுவித்தல் தொடர்பாகவும், பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பது உட்பட பல்வேறு மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்குரிய தீர்மானங்களும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆரயப்பட்டிருந்தன.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், து.ரவிகரன், முத்துமுகமது, மற்றும் மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ்குமார், பிரதேசசெயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி, கிராமஅபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் : ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டமானது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.இதன்போது வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைதொடர்பாக, கணகராயன்குளம் தெற்கு அபிவிருத்தி சங்கத்தின் காணியை பொலிஸாரின் பாவனையில் இருந்து விடுவித்தல் தொடர்பாகவும், பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பது உட்பட பல்வேறு மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்குரிய தீர்மானங்களும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆரயப்பட்டிருந்தன.கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், து.ரவிகரன், முத்துமுகமது, மற்றும் மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ்குமார், பிரதேசசெயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி, கிராமஅபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement