• Jan 19 2025

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு; குளிரூட்டப்பட வேண்டிய தடுப்பூசிகள் காலாவதியாகுமா?

Chithra / Jan 16th 2025, 7:19 am
image


வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் நேற்று துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய  அதிகாரி பணிமனையின் மின்சார கட்டணம் செலுத்தப்படாத நிலையில் நேற்று காலை மின்சார சபை ஊழியர்களால் குறித்த அலுவலகத்துக்கான மின் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அங்கு மின்சாரம் தடைப்பட்டதோடு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படாமையினால் மின் பிறப்பாக்கி மூலமாகவும் மின்சாரம் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊசிகள் சில குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய நிலைமை காணப்பட்ட போதிலும் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்து விடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்து அறிவில்லாததுக்கான மின் கட்டணம் நீண்ட காலமாக செலுத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு; குளிரூட்டப்பட வேண்டிய தடுப்பூசிகள் காலாவதியாகுமா வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் நேற்று துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.வவுனியா சுகாதார வைத்திய  அதிகாரி பணிமனையின் மின்சார கட்டணம் செலுத்தப்படாத நிலையில் நேற்று காலை மின்சார சபை ஊழியர்களால் குறித்த அலுவலகத்துக்கான மின் துண்டிக்கப்பட்டது.இதன் காரணமாக அங்கு மின்சாரம் தடைப்பட்டதோடு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படாமையினால் மின் பிறப்பாக்கி மூலமாகவும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊசிகள் சில குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய நிலைமை காணப்பட்ட போதிலும் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்து விடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்து அறிவில்லாததுக்கான மின் கட்டணம் நீண்ட காலமாக செலுத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement