• Nov 26 2024

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபர் - விரட்டி பிடித்து நையப்புடைத்த இளைஞர்கள்!

Tamil nila / Aug 28th 2024, 8:30 pm
image

வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்ப்படுத்திய கார் சாரதி இளைஞர்களால் விரட்டிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்து ஒன்றை ஏற்ப்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது வைரவபுளியங்குளம்,

 மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.


இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றுள்ளனர். அதிவேகமாக பயணித்த கார் பூந்தோட்டம், பெரியார்குளம் பகுதியில் வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி நின்றது.

காரின் சாரதியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபர் - விரட்டி பிடித்து நையப்புடைத்த இளைஞர்கள் வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்ப்படுத்திய கார் சாரதி இளைஞர்களால் விரட்டிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்து ஒன்றை ஏற்ப்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது வைரவபுளியங்குளம், மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றுள்ளனர். அதிவேகமாக பயணித்த கார் பூந்தோட்டம், பெரியார்குளம் பகுதியில் வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி நின்றது.காரின் சாரதியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement