மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் வட்டா ரக வாகனத்தில் ஒருதொகுதி அரிமூட்டைகள் கொண்டு செல்லப்படுவதாகவும், அது தேர்தலுக்காக மக்களுக்கு பகிர்ந்தழிக்கப்படுவதற்காக இருக்கலாம் என தேர்தல் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய உடன் விரைந்து செற்பட்ட தேல்தல் திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு உரிய வாகனத்தை அவதானித்துள்ளனர்.
பின்னர் அசிரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தையும், உரிய சாரதியையும் அழைத்துக் கொண்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனை விசாரித்த பொலிசார்,
குறித்த அசிரிமூட்டைகளில் எந்தவித கட்சி சார்ந்த விடையங்களோ, சின்னங்களோ இல்லை. வீதியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே அது தம்மிடம் அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தலா 5 கிலோ எடையுள்ள 250 அரிசி மூட்டைகளை ஏறாவூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் கல்லாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கல்லாறு பகுதியிலிருந்து ஒருவர் வந்து அந்த அரிசி மூடைகளை பெற்றுக் கொள்ளவிருந்துள்ளார். எனினும் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டுவந்த வாகனத்தின் சாரதி உரிய நபருக்கு தொலைபேசி அழைப்பெடுத்துள்ளார்.
அவர் வருவதற்கு காலதாமதமான நிலையில் உரிய வாகனத்தின் சாரதி கல்லாறு பகுதியிலிருந்து மீண்டும் ஏறாவூர் பகுதி நோக்கி திரும்பிச் செல்லும் வழியிலேயே அவர் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டு பொலிசாரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளளார்.
எனினும் தான் தனது வாகனத்தில் ஏற்றி வந்த அரிசி மூட்டைகளை யாருக்கு ஒப்படைக்க வேண்டும் என தனக்குத் தெரியாது எனவும், கல்லாறு பகுதியிலிருந்து ஒருவர் வந்து பெற்றுக் கொள்வார் எனவும், அரிசி மூட்டைகளை ஏற்றிவிட்ட கடைஉரிமையாளர் தெரிவித்துள்ளார்
மேலும் உரிய நபர் அங்கு வந்து அரிசி மூடைகளை பொறுப்பேற்காத நிலையில் தான் திரும்பிச் சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் உரிய வாகனத்தின் சாரதியின் பக்கமிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
இவ்வாறு ஒரு தொகுதி அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதை அறிந்த பல அரசியற் கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியிருந்தையும் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பில் அரிசிமூட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனம் - பொலிஸாரிடம் ஒப்படைப்பு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் வட்டா ரக வாகனத்தில் ஒருதொகுதி அரிமூட்டைகள் கொண்டு செல்லப்படுவதாகவும், அது தேர்தலுக்காக மக்களுக்கு பகிர்ந்தழிக்கப்படுவதற்காக இருக்கலாம் என தேர்தல் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய உடன் விரைந்து செற்பட்ட தேல்தல் திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு உரிய வாகனத்தை அவதானித்துள்ளனர்.பின்னர் அசிரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தையும், உரிய சாரதியையும் அழைத்துக் கொண்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதனை விசாரித்த பொலிசார், குறித்த அசிரிமூட்டைகளில் எந்தவித கட்சி சார்ந்த விடையங்களோ, சின்னங்களோ இல்லை. வீதியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே அது தம்மிடம் அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தலா 5 கிலோ எடையுள்ள 250 அரிசி மூட்டைகளை ஏறாவூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் கல்லாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கல்லாறு பகுதியிலிருந்து ஒருவர் வந்து அந்த அரிசி மூடைகளை பெற்றுக் கொள்ளவிருந்துள்ளார். எனினும் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டுவந்த வாகனத்தின் சாரதி உரிய நபருக்கு தொலைபேசி அழைப்பெடுத்துள்ளார்.அவர் வருவதற்கு காலதாமதமான நிலையில் உரிய வாகனத்தின் சாரதி கல்லாறு பகுதியிலிருந்து மீண்டும் ஏறாவூர் பகுதி நோக்கி திரும்பிச் செல்லும் வழியிலேயே அவர் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டு பொலிசாரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளளார்.எனினும் தான் தனது வாகனத்தில் ஏற்றி வந்த அரிசி மூட்டைகளை யாருக்கு ஒப்படைக்க வேண்டும் என தனக்குத் தெரியாது எனவும், கல்லாறு பகுதியிலிருந்து ஒருவர் வந்து பெற்றுக் கொள்வார் எனவும், அரிசி மூட்டைகளை ஏற்றிவிட்ட கடைஉரிமையாளர் தெரிவித்துள்ளார்மேலும் உரிய நபர் அங்கு வந்து அரிசி மூடைகளை பொறுப்பேற்காத நிலையில் தான் திரும்பிச் சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் உரிய வாகனத்தின் சாரதியின் பக்கமிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.இவ்வாறு ஒரு தொகுதி அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதை அறிந்த பல அரசியற் கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியிருந்தையும் அவதானிக்க முடிந்தது.