• Jan 23 2025

நூறு கைதிகளுடன் சேர்த்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஞானசார தேரர்

Chithra / Jan 10th 2025, 11:56 am
image


சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

‘கே’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகாரிகள், அரச ஊழியர்கள் மற்றும் பலர் இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பதிவு செயல்முறைக்குப் பின்னர், ஞானசார தேரர் சிறையில் அணிய வேண்டிய ஆடையை பரிந்துரைப்பதில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. 

நூறு கைதிகளுடன் சேர்த்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஞானசார தேரர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ‘கே’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகாரிகள், அரச ஊழியர்கள் மற்றும் பலர் இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.பதிவு செயல்முறைக்குப் பின்னர், ஞானசார தேரர் சிறையில் அணிய வேண்டிய ஆடையை பரிந்துரைப்பதில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement