• Nov 25 2024

நூற்றாண்டினை காணும் வித்தியானந்தனின் அருங்காட்சியகம் திறந்து வைப்பு..!

Tamil nila / May 8th 2024, 6:57 pm
image

மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் குடும்ப உறவினர்களின் ஒழுங்கமைப்பில் எற்பாடு செய்யப்பட்ட அமரர் பேராசிரியர்  வித்தியானந்தனின் பிறந்த தினத்தில், நூற்றாண்டினை காணும் வித்தியானந்தனின் அருங்காட்சியகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் குடும்ப உறவினர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

பின்னர் அமரரின் திருவுருவபடத்திற்கான திரைநீக்கம் செய்து வைத்ததுடன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இவ் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சு.ரகுராம், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவரும் சிவபூமியின் தலைவரும் ஆகிய ஆறு. திருமுருகன், வாழ் நாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், மறைந்த பேராசிரியர் வித்தியானந்தன் அறக்கட்டளை தலைவர் வி.கமலநாதன் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் பங்கெடுத்தனர்.




நூற்றாண்டினை காணும் வித்தியானந்தனின் அருங்காட்சியகம் திறந்து வைப்பு. மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் குடும்ப உறவினர்களின் ஒழுங்கமைப்பில் எற்பாடு செய்யப்பட்ட அமரர் பேராசிரியர்  வித்தியானந்தனின் பிறந்த தினத்தில், நூற்றாண்டினை காணும் வித்தியானந்தனின் அருங்காட்சியகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் குடும்ப உறவினர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.பின்னர் அமரரின் திருவுருவபடத்திற்கான திரைநீக்கம் செய்து வைத்ததுடன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இவ் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சு.ரகுராம், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவரும் சிவபூமியின் தலைவரும் ஆகிய ஆறு. திருமுருகன், வாழ் நாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், மறைந்த பேராசிரியர் வித்தியானந்தன் அறக்கட்டளை தலைவர் வி.கமலநாதன் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் பங்கெடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement