• May 18 2024

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு பேரணி!

Sharmi / Jan 13th 2023, 11:07 am
image

Advertisement

இந்திய மீனவர்கள் யாழ் குருநகர் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை  நிறுத்துமாறு கோரியும், இந்திய மீனவர்களால் மீன்பிடிப் படகுகள் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனத்தைத் தெரிவித்தும், போதைப் பொருட் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரியும் குருநகர்,பாசையூர் மற்றும் மண்டைதீவு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று காலை 10மணிக்கு யாழில் கண்டனப் பேரணி ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த பேரணியானது குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்திலிருந்து  ஆரம்பமாகி பேரணியாக யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்திற்கு சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர். 

அதனைத் தொடர்ந்து யாழில் உள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு பேரணி இந்திய மீனவர்கள் யாழ் குருநகர் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை  நிறுத்துமாறு கோரியும், இந்திய மீனவர்களால் மீன்பிடிப் படகுகள் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனத்தைத் தெரிவித்தும், போதைப் பொருட் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரியும் குருநகர்,பாசையூர் மற்றும் மண்டைதீவு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று காலை 10மணிக்கு யாழில் கண்டனப் பேரணி ஒன்றினை மேற்கொண்டனர்.குறித்த பேரணியானது குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்திலிருந்து  ஆரம்பமாகி பேரணியாக யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்திற்கு சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து யாழில் உள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement