• Dec 01 2022

தளபதி67 இல் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய்: வெளியான லேட்டஸ் அப்டேட்!

Sharmi / 6 days ago
image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 67' படத்தின் புதிய அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்துகிடக்கின்றது. இந்நிலையில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் (டிசம்பர்) பிரமாண்டமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதேவேளை இந்த படத்தில் விஜய் 40 வயது மனிதராக நடிக்கிறாராம். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட தரமான கேங்ஸ்டார் திரைப்படமாக இந்த படம் உருவாகவுள்ளதாம். படத்திற்கான படப்பிடிப்பு 8 மாதங்கள் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வரவில்லை ஆனால், படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

அதன்படி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 160 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதனைவிட விஜய்67 படத்திற்கான சாட்டிலைட் உரிமையை சன் டிவி தொலைக்காட்சி 80 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மொத்தமாக படம் வெளியாவதற்கு முன்பே 240 கோடி வியாபாரம் ஆகியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பது இதன் மூலமே தெரிய வருகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் குறித்த படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.