• Sep 17 2024

மீண்டும் மணிப்பூரில் வெடித்த வன்முறை - 3 பேர் மீது துப்பாக்கி சூடு! samugammedia

Tamil nila / Aug 5th 2023, 8:23 pm
image

Advertisement

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இருப்பினும் முன்னதாக மணிப்பூரில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் அஸ்ஸாம் ரைபிள்ஸின் அத்துமீறிச் செயலைக் கண்டித்து, மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மீரா பைபிஸ், ஆகஸ்ட் 7ஆம் திகதி அஸ்ஸாம் ரைஃபிள்ஸுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


மீண்டும் மணிப்பூரில் வெடித்த வன்முறை - 3 பேர் மீது துப்பாக்கி சூடு samugammedia மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.இருப்பினும் முன்னதாக மணிப்பூரில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.மேலும் அஸ்ஸாம் ரைபிள்ஸின் அத்துமீறிச் செயலைக் கண்டித்து, மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மீரா பைபிஸ், ஆகஸ்ட் 7ஆம் திகதி அஸ்ஸாம் ரைஃபிள்ஸுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement