• Sep 08 2024

மன உழைச்சலை ஏற்படுத்தும் ஓ எம் பி அலுவலகம்: கதறும் தாய் ! samugammedia

Tamil nila / Aug 5th 2023, 8:09 pm
image

Advertisement

காணாமல்போனோர் அலுவலககத்தை தங்கள் புறக்கணித்திருந்தும் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி தமக்கு  மன உழைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் யாழ். மாவட்ட  தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

அத்துடன் , கொக்குத்தொடுவய் மனித புதைகுழியில் தமது உறவுகள் புதைக்கப்பட்டிருப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த புதைகுழி விடயத்தில் சர்வதேச நிபுணர்களின் பூரண கண்காணிப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார் 

இதுதொடர்பில் சிவபாதம் இளங்கோதை மேலும் தெரிவிக்கையில் , 

14  வருடங்களும் பிள்ளைகள் சரணடைந்த பின்னர் தேடாத இடஙகளுமில்லை செய்யாத போராட்டங்களுமில்லை. போராட்டகள் செய்தும் சிறிலங்காவில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை என்பதால் சர்வதேசம்  பொறுப்புக்கூற வேண்டும் என கோரினோம். 

அவ்வாறு  இருக்கையில் காணாமல்போனோர் அலுவலகம்  எமக்கான தீர்வைத் தருவார்கள் என ஆரம்பத்தில் நம்பியிருந்தபோதும் அவர்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையையே மேற்கொண்டனர்.

குறித்த அலுவலத்தில் எமது பிரச்சினைகளை முன்வைக்கும்போது மாறா தமக்கேற்றவாறு செயற்படுமாறு கூறினால் ஏன் இந்த அலுவலகம் என எண்ணத் தோன்றுகின்றது.  குறித்த அலுவலக நடவடிக்கைகளை நாம் வேண்டாமென புறக்கணித்திருந்தும் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி எம்மை மன உழைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

எமக்கு குறித்த அலுவலகத்தி்ன் மீது நம்பிக்கையில்லை என கூறி எமது பெயரையும் எமது கோப்புக்ளையும் நீக்குமாறு கோரிய போதும் நீக்கப்படவில்லை.  இதேவேளை கொக்குத்தொடுவாய் புதைகுழியில் எமது பிள்ளைகளின் உடல் எச்சங்கள் இருக்குமோ என்ற அச்சத்தில் போராட்டங்களை மேற்கொள்கின்றோம். 

எமது பிள்ளைகளை மண்ணுக்குள் புதைத்துள்ள நிலையில் நாம் காணாமல்போனோர் அலுவலக விசாரணையை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.  சர்வதேச பொறிமுறைக்குட்பட்டு சர்வதேச நிபுணர்களின் பூரண கண்காணிப்புடன் கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

மன உழைச்சலை ஏற்படுத்தும் ஓ எம் பி அலுவலகம்: கதறும் தாய் samugammedia காணாமல்போனோர் அலுவலககத்தை தங்கள் புறக்கணித்திருந்தும் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி தமக்கு  மன உழைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் யாழ். மாவட்ட  தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.அத்துடன் , கொக்குத்தொடுவய் மனித புதைகுழியில் தமது உறவுகள் புதைக்கப்பட்டிருப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த புதைகுழி விடயத்தில் சர்வதேச நிபுணர்களின் பூரண கண்காணிப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார் இதுதொடர்பில் சிவபாதம் இளங்கோதை மேலும் தெரிவிக்கையில் , 14  வருடங்களும் பிள்ளைகள் சரணடைந்த பின்னர் தேடாத இடஙகளுமில்லை செய்யாத போராட்டங்களுமில்லை. போராட்டகள் செய்தும் சிறிலங்காவில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை என்பதால் சர்வதேசம்  பொறுப்புக்கூற வேண்டும் என கோரினோம். அவ்வாறு  இருக்கையில் காணாமல்போனோர் அலுவலகம்  எமக்கான தீர்வைத் தருவார்கள் என ஆரம்பத்தில் நம்பியிருந்தபோதும் அவர்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையையே மேற்கொண்டனர்.குறித்த அலுவலத்தில் எமது பிரச்சினைகளை முன்வைக்கும்போது மாறா தமக்கேற்றவாறு செயற்படுமாறு கூறினால் ஏன் இந்த அலுவலகம் என எண்ணத் தோன்றுகின்றது.  குறித்த அலுவலக நடவடிக்கைகளை நாம் வேண்டாமென புறக்கணித்திருந்தும் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி எம்மை மன உழைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.எமக்கு குறித்த அலுவலகத்தி்ன் மீது நம்பிக்கையில்லை என கூறி எமது பெயரையும் எமது கோப்புக்ளையும் நீக்குமாறு கோரிய போதும் நீக்கப்படவில்லை.  இதேவேளை கொக்குத்தொடுவாய் புதைகுழியில் எமது பிள்ளைகளின் உடல் எச்சங்கள் இருக்குமோ என்ற அச்சத்தில் போராட்டங்களை மேற்கொள்கின்றோம். எமது பிள்ளைகளை மண்ணுக்குள் புதைத்துள்ள நிலையில் நாம் காணாமல்போனோர் அலுவலக விசாரணையை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.  சர்வதேச பொறிமுறைக்குட்பட்டு சர்வதேச நிபுணர்களின் பூரண கண்காணிப்புடன் கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement