பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில்,
பூச்சிகளால் தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், சில வியாபாரிகள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இரசாயனங்களை சேர்க்கின்றனர்.
இதன்காரணமாக சந்தையில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான தானியங்களை பரிசோதிக்கும் பணியில் உணவுப்பொருள் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நச்சுப் பொருள் அடங்கிய இரசாயனங்கள் கலந்து விற்கப்படும் தானியங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே தானியங்களை கொள்வனவு செய்பவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தானியங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில்,பூச்சிகளால் தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், சில வியாபாரிகள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இரசாயனங்களை சேர்க்கின்றனர்.இதன்காரணமாக சந்தையில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான தானியங்களை பரிசோதிக்கும் பணியில் உணவுப்பொருள் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நச்சுப் பொருள் அடங்கிய இரசாயனங்கள் கலந்து விற்கப்படும் தானியங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனவே தானியங்களை கொள்வனவு செய்பவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.