யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும், ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும், அத்துடன் மருந்தகத்தில் மரணச்சடங்கு நடைபெற்ற தினத்தில் வியாபாரம் இடம்பெற்றதாகவும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எமது வீடு மற்றும் மருந்தகம் என்பன தனித்தனியாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் வேறு வேறான ஆதன இலக்கங்கள், அமைவுச் சான்றிதழ்களும் உள்ளன. இரண்டுக்கான வாயில்களும் வேறுவேறாக உள்ளன.
அண்மையில் எனது உறவினர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இரண்டு நாட்கள் அவரது பூதவுடலானது மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மரணச் சடங்கு நடைபெற்றது எனது மாமியாரின் வீட்டில். அந்த வீடானது மருந்தகத்திற்கு பின்னால் வேறாக அமைந்துள்ளது.
அடுத்ததாக மருந்துகள் இடம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. மருந்தகம் பூட்டப்பட்டிருந்ததனால் மருந்துகள் எவையும் விநியோகிக்கப்படவில்லை. இதனை எமது மருந்தகத்திற்கு வந்த உணவுப் பரிசோதர்களும் உறுதிப்படுத்தி இருந்தார்கள்.
மரணச் சடங்கு நடைபெற்ற வேளையிலே மருந்து விற்பனை இடம்பெற்று இருந்ததாக காட்டுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நான் மயானத்திற்கு சென்று தகனக் கிரியைகளில் ஈடுபட்டு விட்டு வந்து மருந்தகத்திற்கு வெளியே இருந்தேன்.
அந்த வேளையில் ஒருவர் வந்து கண்ணுக்கு விடக்கூடிய மருந்து போத்தலை காட்டி "இந்த மருந்து உங்களது மருந்தகத்தில் மாத்திரம் இருந்ததனால் உங்களிடமே வாங்கினேன். தற்போது மிகவும் அவசர தேவையாக உள்ளதால் இந்த மருந்தினை வாங்க வேண்டி உள்ளது. எங்கே வாங்கலாம்" என கேட்டிருந்தார். அதற்கு நான் "இது குறித்து எனக்கு தெரியாது எனது மனைவியிடம் கேளுங்கள், அவர் இதனை எங்கு வாங்கலாம் எனக் கூறுவார்" என்று நான் அவருக்கு கூறினேன்.
அவர் மனைவிடம் சென்று குறித்த மருந்து குப்பியை வழங்கி இதனை எங்கே வாங்கலாம் என வினவியுள்ளார்.
குறித்த மருந்து குப்பியை வாங்கிப் பார்த்த எனது மனைவி இது எம்மிடம் இல்லை, அருகில் உள்ள மருந்தகத்திலோ அல்லது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள மருந்தகங்களிலோ வாங்கலாம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தார்.
அவர் சூட்சுமமான முறையில் ஒரு கேமராவினை வைத்து அதனை படம்பிடித்து நாங்கள் மருந்து விற்பனை செய்ததாக காட்ட முற்பட்டுள்ளார்.
சுகாதாரத் துறையினருக்கு எதிராக எனது மனைவியால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கு நெருங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான பழிவாங்கல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த தீபாவளி தினம் ஒன்றிலும் திட்டமிட்டு எமது மருந்தகம் மீது இவ்வாறு ஒரு பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே மக்கள் இதுகுறித்து தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
யாழிலுள்ள மருந்தகத்தில் மரணச்சடங்கு இடம்பெற்றதா பழிவாங்கல் நடவடிக்கை என்கிறார் உரிமையாளரான வைத்தியர் யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும், ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும், அத்துடன் மருந்தகத்தில் மரணச்சடங்கு நடைபெற்ற தினத்தில் வியாபாரம் இடம்பெற்றதாகவும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இதுகுறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை குறித்த மருந்தகத்தின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் நேற்றையதினம் (25) நடத்தியிருந்தார். இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,எமது வீடு மற்றும் மருந்தகம் என்பன தனித்தனியாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் வேறு வேறான ஆதன இலக்கங்கள், அமைவுச் சான்றிதழ்களும் உள்ளன. இரண்டுக்கான வாயில்களும் வேறுவேறாக உள்ளன.அண்மையில் எனது உறவினர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இரண்டு நாட்கள் அவரது பூதவுடலானது மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மரணச் சடங்கு நடைபெற்றது எனது மாமியாரின் வீட்டில். அந்த வீடானது மருந்தகத்திற்கு பின்னால் வேறாக அமைந்துள்ளது.அடுத்ததாக மருந்துகள் இடம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. மருந்தகம் பூட்டப்பட்டிருந்ததனால் மருந்துகள் எவையும் விநியோகிக்கப்படவில்லை. இதனை எமது மருந்தகத்திற்கு வந்த உணவுப் பரிசோதர்களும் உறுதிப்படுத்தி இருந்தார்கள். மரணச் சடங்கு நடைபெற்ற வேளையிலே மருந்து விற்பனை இடம்பெற்று இருந்ததாக காட்டுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நான் மயானத்திற்கு சென்று தகனக் கிரியைகளில் ஈடுபட்டு விட்டு வந்து மருந்தகத்திற்கு வெளியே இருந்தேன்.அந்த வேளையில் ஒருவர் வந்து கண்ணுக்கு விடக்கூடிய மருந்து போத்தலை காட்டி "இந்த மருந்து உங்களது மருந்தகத்தில் மாத்திரம் இருந்ததனால் உங்களிடமே வாங்கினேன். தற்போது மிகவும் அவசர தேவையாக உள்ளதால் இந்த மருந்தினை வாங்க வேண்டி உள்ளது. எங்கே வாங்கலாம்" என கேட்டிருந்தார். அதற்கு நான் "இது குறித்து எனக்கு தெரியாது எனது மனைவியிடம் கேளுங்கள், அவர் இதனை எங்கு வாங்கலாம் எனக் கூறுவார்" என்று நான் அவருக்கு கூறினேன்.அவர் மனைவிடம் சென்று குறித்த மருந்து குப்பியை வழங்கி இதனை எங்கே வாங்கலாம் என வினவியுள்ளார். குறித்த மருந்து குப்பியை வாங்கிப் பார்த்த எனது மனைவி இது எம்மிடம் இல்லை, அருகில் உள்ள மருந்தகத்திலோ அல்லது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள மருந்தகங்களிலோ வாங்கலாம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தார். அவர் சூட்சுமமான முறையில் ஒரு கேமராவினை வைத்து அதனை படம்பிடித்து நாங்கள் மருந்து விற்பனை செய்ததாக காட்ட முற்பட்டுள்ளார்.சுகாதாரத் துறையினருக்கு எதிராக எனது மனைவியால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு நெருங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான பழிவாங்கல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த தீபாவளி தினம் ஒன்றிலும் திட்டமிட்டு எமது மருந்தகம் மீது இவ்வாறு ஒரு பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே மக்கள் இதுகுறித்து தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.