• Sep 08 2024

இலங்கையிலுள்ள அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவத்தை கொடுக்கிறோம்-பிரதமர்...!samugammedia

Sharmi / Apr 24th 2023, 9:44 am
image

Advertisement

புத்தரின் போதனைகளை அடிப்படையாக கொண்டு இலங்கையிலுள்ள அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவத்தை கொடுத்து வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

இதேவேளை இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை மறந்துவிடக்கூடாதென பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மண்டப திறப்புவிழாவில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தபோது உதவி செய்தது, இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கின்றது என்பதை யாராலும் மறந்துவிட முடியாது.

சீதையம்மன் ஆலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தியான மண்டபத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அதற்கு காரணம் அதற்கான நிதியை வழங்குகின்றவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இது ஒரு புறம் எங்களுடைய நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற கலை கலாச்சார ரீதியான ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

எங்களுடைய இரு நாட்டிற்கான உறவு பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது.

இந்தியாவின் இமயமலையின் பல பகுதிகளிலும் தியான மண்டபங்களும் அதற்கான சூழலும் அமைந்திருக்கின்றது.

அதே போல இன்று இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகால மலையின் அடிவாரத்தில் சீதையம்மன் ஆலயத்தில் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் மிகவும் அழகாக இராமயணத்திற்கும் இலங்கைக்குமான தொடர்பை விரிவாக எடுத்துக் கூறினார். இந்த இதிகாசமானது பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது.
இலங்கை நாடானது இன்று முன்னோக்கி செல்கிறது என்றால் அதற்கு இந்தியா எங்களுக்கு செய்த உதவிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவத்தை கொடுக்கிறோம்-பிரதமர்.samugammedia புத்தரின் போதனைகளை அடிப்படையாக கொண்டு இலங்கையிலுள்ள அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவத்தை கொடுத்து வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிக்கின்றார்.இதேவேளை இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை மறந்துவிடக்கூடாதென பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மண்டப திறப்புவிழாவில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தபோது உதவி செய்தது, இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கின்றது என்பதை யாராலும் மறந்துவிட முடியாது. சீதையம்மன் ஆலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தியான மண்டபத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அதற்கு காரணம் அதற்கான நிதியை வழங்குகின்றவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இது ஒரு புறம் எங்களுடைய நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற கலை கலாச்சார ரீதியான ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. எங்களுடைய இரு நாட்டிற்கான உறவு பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது.இந்தியாவின் இமயமலையின் பல பகுதிகளிலும் தியான மண்டபங்களும் அதற்கான சூழலும் அமைந்திருக்கின்றது.அதே போல இன்று இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகால மலையின் அடிவாரத்தில் சீதையம்மன் ஆலயத்தில் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது.இலங்கைக்கான இந்திய தூதுவர் மிகவும் அழகாக இராமயணத்திற்கும் இலங்கைக்குமான தொடர்பை விரிவாக எடுத்துக் கூறினார். இந்த இதிகாசமானது பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது.இலங்கை நாடானது இன்று முன்னோக்கி செல்கிறது என்றால் அதற்கு இந்தியா எங்களுக்கு செய்த உதவிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement