• Oct 04 2024

இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்- ஆறு.திருமுருகன் வலியுறுத்து..!

Sharmi / Oct 4th 2024, 4:00 pm
image

Advertisement

இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என தெரிவித்த சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு.திருருமுருகன் தெரிவித்ததுடன், யாழில் சங்கானையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தொழுநோயாளர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களை சந்திக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தொழு நோயாளர்களை மலர்ச்சி காண வைப்பதற்காக உருவாக்கப்பட்ட  நோயாளர்களுக்கான மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் (மாற்றும் மக்கள் சபை)  காவேரி கலா மன்றத்தின் கூட்டு முயற்சியிகளை பாராட்டுகிறேன்.

இலங்கையில் தொழுநோய் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்காமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். 

ஆரம்ப காலங்களில்  சரியான மருந்து இன்மை, மற்றும் முறையான ஆற்றுப் படுத்தல் இன்மை காரணமாக தொழு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திக்கும் வாய்ப்புகள் காணப்பட்டது. 

ஆனால் தற்போது தொழுநோயினால் பாதிக்கப் பட்டவர்களை வெறுக்காமல் இருப்பதற்கும், வைத்திசாலையில் கிடைக்க கூடிய இலவச மருத்துவ வசதிகளை பெற்று கொடுக்கவும்  தொழு நோயாளர்கள் மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்கின்றமை வரவேற்கத்தக்கது. 

மேலும் இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை பாராளுமன்றத்தில் தொழுநோயாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான புதிய அணுகுமுறைகளை உருவாக்கி பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.

அது மட்டுமல்ல கிராமிய ரீதியிலும் தொழுநோயாளர்கள் மற்றும் விழிப்புணர்வு  சார் அக்கறை ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  சங்கானை பகுதியில் அதிகளவான தொழு நோயாளர்கள் இருப்பதை அறியும் போது வருத்தமளிக்கிறது.

உரிய காலத்தில் சரியான மருத்துவம் மேற்கொள்ளும் போது தொழு நோயை முற்றாக தடுக்க முடியும் என்ற போதிலும் கூட, உள்ளூர் வைத்தியர்களின் பாரம்பரிய முறைசாரா வைத்திய முறைகளை பின்பற்றி  நோயின் தாக்கம் அதிகரிக்கும் தன்மையும் காணப்படுகின்றது. 

எனவே, அரச வைத்தியசாலைகளில் முறையாக கிடைக்கப்பெறும் இலவச வைத்திய உதவிகளை பெற்று கொள்வதன் ஊடாக தொழுநோயிலிருந்து முறையாக விடுதலை பெறலாம் என்பதை  உணர வேண்டும்.

எனவே வைத்தியதுறையில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடம் சார்ந்தவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.


இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்- ஆறு.திருமுருகன் வலியுறுத்து. இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என தெரிவித்த சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு.திருருமுருகன் தெரிவித்ததுடன், யாழில் சங்கானையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.இலங்கையில் தொழுநோயாளர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களை சந்திக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள தொழு நோயாளர்களை மலர்ச்சி காண வைப்பதற்காக உருவாக்கப்பட்ட  நோயாளர்களுக்கான மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் (மாற்றும் மக்கள் சபை)  காவேரி கலா மன்றத்தின் கூட்டு முயற்சியிகளை பாராட்டுகிறேன்.இலங்கையில் தொழுநோய் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்காமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஆரம்ப காலங்களில்  சரியான மருந்து இன்மை, மற்றும் முறையான ஆற்றுப் படுத்தல் இன்மை காரணமாக தொழு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திக்கும் வாய்ப்புகள் காணப்பட்டது. ஆனால் தற்போது தொழுநோயினால் பாதிக்கப் பட்டவர்களை வெறுக்காமல் இருப்பதற்கும், வைத்திசாலையில் கிடைக்க கூடிய இலவச மருத்துவ வசதிகளை பெற்று கொடுக்கவும்  தொழு நோயாளர்கள் மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்கின்றமை வரவேற்கத்தக்கது. மேலும் இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை பாராளுமன்றத்தில் தொழுநோயாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான புதிய அணுகுமுறைகளை உருவாக்கி பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.அது மட்டுமல்ல கிராமிய ரீதியிலும் தொழுநோயாளர்கள் மற்றும் விழிப்புணர்வு  சார் அக்கறை ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  சங்கானை பகுதியில் அதிகளவான தொழு நோயாளர்கள் இருப்பதை அறியும் போது வருத்தமளிக்கிறது. உரிய காலத்தில் சரியான மருத்துவம் மேற்கொள்ளும் போது தொழு நோயை முற்றாக தடுக்க முடியும் என்ற போதிலும் கூட, உள்ளூர் வைத்தியர்களின் பாரம்பரிய முறைசாரா வைத்திய முறைகளை பின்பற்றி  நோயின் தாக்கம் அதிகரிக்கும் தன்மையும் காணப்படுகின்றது. எனவே, அரச வைத்தியசாலைகளில் முறையாக கிடைக்கப்பெறும் இலவச வைத்திய உதவிகளை பெற்று கொள்வதன் ஊடாக தொழுநோயிலிருந்து முறையாக விடுதலை பெறலாம் என்பதை  உணர வேண்டும்.எனவே வைத்தியதுறையில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடம் சார்ந்தவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement