• May 19 2024

விரைவில் முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக மாற்றுவோம் - ஜனாதிபதி நம்பிக்கை..! samugammedia

Tamil nila / Sep 8th 2023, 6:08 am
image

Advertisement

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியடையாத பிரதேசமாக இருந்த பியகம பிரதேசத்தில்  வர்த்தக வலயம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை அடைந்துள்ளதாகவும் முழு இலங்கையையும்  முதலீட்டு வலயமாக மாற்றி பல புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகிற்கு திறந்துவிடப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் பிங்கிரிய, இரணவில, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கான இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 

அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக நிர்மாணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


விரைவில் முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக மாற்றுவோம் - ஜனாதிபதி நம்பிக்கை. samugammedia பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அபிவிருத்தியடையாத பிரதேசமாக இருந்த பியகம பிரதேசத்தில்  வர்த்தக வலயம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை அடைந்துள்ளதாகவும் முழு இலங்கையையும்  முதலீட்டு வலயமாக மாற்றி பல புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகிற்கு திறந்துவிடப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.இதன் போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் பிங்கிரிய, இரணவில, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கான இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக நிர்மாணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement