• May 09 2024

எடைக்கு எடை தங்கம்: மகளின் திருமணத்தில் மொத்த பேரையும் வாயை பிளக்கவைத்த தந்தை!SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 5:27 pm
image

Advertisement

துபாயில் நடைபெற்ற திருமணத்தில் தனது மகளுக்கு எடைக்கு எடை தங்கத்தை சீர்வரிசையாக ஒருவர் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயை சேர்ந்த தொழிலதிபர் அண்மையில் தனது மகளுக்கு திருமணம் நடத்த முடிவெடுத்திருக்கிறார்.

அவர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என தெரிகிறது. திருமணத்தில் தனது மகளின் எடைக்கு எடை தங்கம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார் அந்த தொழிலதிபர். அதன்படி, திருமணம் நடைபெறும் இடத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அங்கிருந்த பிரம்மாண்ட தராசில் ஒருபுறம் இளம்பெண் அமர்ந்திருக்க அவருக்கு அடுத்துள்ள தட்டில் தங்க கட்டிகள் அடுக்கப்படுகின்றன. இதனை அந்த திருமணத்திற்கு வந்த அனைவரும் திகைத்துப்போய் பார்க்கின்றனர்.


இந்த வைபவத்தில் சுமார் 70 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில் திருமணம் எங்கே நடந்தது?, தம்பதி மற்றும் தொழிலதிபரின் பெயர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி குறித்தும் சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.



எடைக்கு எடை தங்கம்: மகளின் திருமணத்தில் மொத்த பேரையும் வாயை பிளக்கவைத்த தந்தைSamugamMedia துபாயில் நடைபெற்ற திருமணத்தில் தனது மகளுக்கு எடைக்கு எடை தங்கத்தை சீர்வரிசையாக ஒருவர் கொடுத்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயை சேர்ந்த தொழிலதிபர் அண்மையில் தனது மகளுக்கு திருமணம் நடத்த முடிவெடுத்திருக்கிறார். அவர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என தெரிகிறது. திருமணத்தில் தனது மகளின் எடைக்கு எடை தங்கம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார் அந்த தொழிலதிபர். அதன்படி, திருமணம் நடைபெறும் இடத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.அங்கிருந்த பிரம்மாண்ட தராசில் ஒருபுறம் இளம்பெண் அமர்ந்திருக்க அவருக்கு அடுத்துள்ள தட்டில் தங்க கட்டிகள் அடுக்கப்படுகின்றன. இதனை அந்த திருமணத்திற்கு வந்த அனைவரும் திகைத்துப்போய் பார்க்கின்றனர். இந்த வைபவத்தில் சுமார் 70 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில் திருமணம் எங்கே நடந்தது, தம்பதி மற்றும் தொழிலதிபரின் பெயர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி குறித்தும் சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement