• May 05 2024

சிங்கப்பூரில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்! SamugamMedia

Tamil nila / Feb 25th 2023, 5:26 pm
image

Advertisement

சிங்கப்பூரில் பல பொருட்களைத் தடை செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, மன-ரீதியான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்களே இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.


புதுவகைப் போதைப் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதிகாரிகள் அந்தப் பிரச்சினையை விரைந்து கையாள உதவியாக, சட்டத்தில் மாற்றங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.


போதைப் பொருள்களைக் கடத்தும் கும்பல்கள், புதுவகைப் போதைப் பொருள்களில் உள்ள ரசாயனங்களை எளிதில் மாற்றியமைக்கின்றன.


அதன்வழி அவர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் சாத்தியம் உருவாகிறது. புதுவகை போதைப் பொருள்களைப் புழங்கிய குற்றத்தின்பேரில், 2018ஆம் ஆண்டிலிருந்து 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஒப்புநோக்க 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை, 11 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.


போதைப் பொருள்களைப் புழங்குவோரைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும், அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்.


அதிக ஆபத்தான, தீங்கு விளைவிக்கக்கூடிய போதைப் பொருள்களை வைத்திருப்போருக்குப் பிரம்படி உள்ளிட்ட மேலும் கடுமையான தண்டனையை விதிக்கவும் அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.


போதைப் பொருளின் வகை, அதன் அளவு-ஆகியவற்றைப் பொறுத்து தண்டனை தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள் SamugamMedia சிங்கப்பூரில் பல பொருட்களைத் தடை செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, மன-ரீதியான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்களே இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.புதுவகைப் போதைப் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதிகாரிகள் அந்தப் பிரச்சினையை விரைந்து கையாள உதவியாக, சட்டத்தில் மாற்றங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.போதைப் பொருள்களைக் கடத்தும் கும்பல்கள், புதுவகைப் போதைப் பொருள்களில் உள்ள ரசாயனங்களை எளிதில் மாற்றியமைக்கின்றன.அதன்வழி அவர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் சாத்தியம் உருவாகிறது. புதுவகை போதைப் பொருள்களைப் புழங்கிய குற்றத்தின்பேரில், 2018ஆம் ஆண்டிலிருந்து 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒப்புநோக்க 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை, 11 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.போதைப் பொருள்களைப் புழங்குவோரைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும், அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்.அதிக ஆபத்தான, தீங்கு விளைவிக்கக்கூடிய போதைப் பொருள்களை வைத்திருப்போருக்குப் பிரம்படி உள்ளிட்ட மேலும் கடுமையான தண்டனையை விதிக்கவும் அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.போதைப் பொருளின் வகை, அதன் அளவு-ஆகியவற்றைப் பொறுத்து தண்டனை தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement