• May 06 2024

அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் கூட்டமைப்பு மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? ஈ.பி.டி.பி. கேள்வி samugammedia

Chithra / Oct 27th 2023, 4:54 pm
image

Advertisement

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நல்லாட்சி என கூறிக்கொண்டு இருந்த கால பகுதியில் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை பெற்றுக்கொள்ளாமல் தற்போது அது தொடர்பில் கருத்து தெரிவித்துக்கொண்டு இருப்பது தமது அரசியல் இலாபத்திற்காக மட்டுமே என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ்.ஊடக அமையத்தில், இன்றைய தினம்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

ஈழமக்கள் ஜனநாயக கட்சி பல்வேறு தடவைகள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. ஆனால் எமது ஆதரவால் தான் அரசாங்கம் இயங்கியது என்ற நிலைமை காணப்படவில்லை.

 எமது ஆதரவானது மேலதிக ஆதரவாகவே இருந்தது. அவ்வாறு இருந்த போதிலும் நாம் மக்களுக்காக பலதை பெற்றுக்கொடுத்து உள்ளோம்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு , மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது தமது ஆதரவை வழங்கி , அரசாங்கத்தை காப்பாற்றி வந்தனர். அவர்களின் ஆதரவில் தான் அரசாங்கம் நடந்தது.

அதேநேரம், வடமாகாண சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டு ஆட்சி அமைத்து இருந்தனர். அக்கால பகுதியில் மத்திய அரசாங்கம் ஊடாகவும், மாகாண சபை ஊடாகவும் பலதை செய்திருக்கலாம்.

மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் 37க்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மாகாண சபைக்கு உண்டு. அவற்றை கொண்டு வினைத்திறனாக நடந்து கொண்டார்களா?

மாகாண ஆளுநரையும் மாகாண செயலரையும் இடம்மாற்றம் செய்ததை தவிர வேறு என்ன செய்ய முடிந்தது?

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள் என கோருகிறார். ஆனால் அவர் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டு மாகாண சபையில் பெரும்பான்மையாக இருந்த போது மாகாணங்களுக்கு உள்ள அதிகாரங்களை வினைத்திறனோடு பயன்படுத்தினார்களா ? என அவர் சிந்திக்க வேண்டும்.

அதேபோன்று கீரிமலை ஜனாதிபதி மாளிகையை தனியார் பல்கலை கழகத்திற்கு கொடுத்தது தவறு என கூறுகின்றார்கள். ஜனாதிபதி மாளிகை மக்களின் காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ளது. அதனை அப்போதைய பாதுகாப்பு செயலரான கோட்டாபய ராஜபக்சே கட்டுவித்தார் என அறிகிறோம்.

மக்களின் காணிகளை சுவீகரித்து மாளிகை கட்டியது தவறு அதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஈழமக்கள் ஜனநாயக கட்சியாகிய நாமும் அதனை கண்டிக்கிறோம்.

நல்லாட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் போது , மாளிகையையும் , மாளிகையை சுற்றியுள்ள காணிகளையும் மக்களிடம் பெற்று கொடுத்து இருக்கலாம்.

ஆனால் அன்று அதனை அவர்கள் செய்யவில்லை. தமது எதிர்கால அரசியல் சுய லாபத்திற்காக அதனை அன்று தீர்க்க விரும்பாமல் இன்று மாளிகையை வந்து தமது அரசியலை முன்னெடுக்கின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.


அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் கூட்டமைப்பு மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன ஈ.பி.டி.பி. கேள்வி samugammedia அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நல்லாட்சி என கூறிக்கொண்டு இருந்த கால பகுதியில் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை பெற்றுக்கொள்ளாமல் தற்போது அது தொடர்பில் கருத்து தெரிவித்துக்கொண்டு இருப்பது தமது அரசியல் இலாபத்திற்காக மட்டுமே என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்யாழ்.ஊடக அமையத்தில், இன்றைய தினம்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி பல்வேறு தடவைகள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. ஆனால் எமது ஆதரவால் தான் அரசாங்கம் இயங்கியது என்ற நிலைமை காணப்படவில்லை. எமது ஆதரவானது மேலதிக ஆதரவாகவே இருந்தது. அவ்வாறு இருந்த போதிலும் நாம் மக்களுக்காக பலதை பெற்றுக்கொடுத்து உள்ளோம்.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு , மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது தமது ஆதரவை வழங்கி , அரசாங்கத்தை காப்பாற்றி வந்தனர். அவர்களின் ஆதரவில் தான் அரசாங்கம் நடந்தது.அதேநேரம், வடமாகாண சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டு ஆட்சி அமைத்து இருந்தனர். அக்கால பகுதியில் மத்திய அரசாங்கம் ஊடாகவும், மாகாண சபை ஊடாகவும் பலதை செய்திருக்கலாம்.மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் 37க்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மாகாண சபைக்கு உண்டு. அவற்றை கொண்டு வினைத்திறனாக நடந்து கொண்டார்களாமாகாண ஆளுநரையும் மாகாண செயலரையும் இடம்மாற்றம் செய்ததை தவிர வேறு என்ன செய்ய முடிந்ததுஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள் என கோருகிறார். ஆனால் அவர் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டு மாகாண சபையில் பெரும்பான்மையாக இருந்த போது மாகாணங்களுக்கு உள்ள அதிகாரங்களை வினைத்திறனோடு பயன்படுத்தினார்களா என அவர் சிந்திக்க வேண்டும்.அதேபோன்று கீரிமலை ஜனாதிபதி மாளிகையை தனியார் பல்கலை கழகத்திற்கு கொடுத்தது தவறு என கூறுகின்றார்கள். ஜனாதிபதி மாளிகை மக்களின் காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ளது. அதனை அப்போதைய பாதுகாப்பு செயலரான கோட்டாபய ராஜபக்சே கட்டுவித்தார் என அறிகிறோம்.மக்களின் காணிகளை சுவீகரித்து மாளிகை கட்டியது தவறு அதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஈழமக்கள் ஜனநாயக கட்சியாகிய நாமும் அதனை கண்டிக்கிறோம்.நல்லாட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் போது , மாளிகையையும் , மாளிகையை சுற்றியுள்ள காணிகளையும் மக்களிடம் பெற்று கொடுத்து இருக்கலாம்.ஆனால் அன்று அதனை அவர்கள் செய்யவில்லை. தமது எதிர்கால அரசியல் சுய லாபத்திற்காக அதனை அன்று தீர்க்க விரும்பாமல் இன்று மாளிகையை வந்து தமது அரசியலை முன்னெடுக்கின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement