• Sep 17 2024

நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து புத்திசாலிகள் என்ன சிந்திக்கிறார்கள் - கேள்வி எழுப்பிய நெல்சன் எம்.பி!

Sharmi / Jan 31st 2023, 10:07 am
image

Advertisement

பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அம்மணி தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விலகி உள்ளதாக ஜனாதிபதி ஊடகம் கூறியுள்ள போதும் அவர் அவ்வாறான கடிதத்தினை வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணையம் குறிப்பிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தற்போதய ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பிற்கான முயற்சிகளையே முன்னெடுக்கின்றார். தேர்தல்கள் ஆணையத்திற்கு மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் தேர்தலை வைப்பதற்கு கெசட் அறிக்கை வெளியிடப்படவில்லை என பல காரணங்களை ஜனாதிபதி கூறி கொண்டு வருவதாக கிங்ஸ் நெல்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மார்ச் மாதம் கண்டிப்பாக தேர்தல் வைக்க வேண்டும் எனவும் கிங்ஸ் நெல்சன் வலியுறுத்தியுள்ளார்.நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து நாட்டிலுள்ள புத்திசாலிகள் என்ன சிந்திக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர்,

அதே போன்று தேசிய மக்கள் சக்தி குறித்து கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மற்றும் நாட்டில் விவசாயம் பொலனறுவை பகுதியில் வயல்கள் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. அன்று உரங்களை பரீசிலனை செய்து பயன் படுத்த சொல்லி ஆனால் இன்று அரிசி இல்லை விவசாயிகளின் நிலை பாரிய பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.

விவசாய அமைச்சர் விவசாயிகளின் பாதிப்புக்கு முதல் வழங்குவதாக கூறினார்கள். ஆனால் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து புத்திசாலிகள் என்ன சிந்திக்கிறார்கள் - கேள்வி எழுப்பிய நெல்சன் எம்.பி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அம்மணி தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விலகி உள்ளதாக ஜனாதிபதி ஊடகம் கூறியுள்ள போதும் அவர் அவ்வாறான கடிதத்தினை வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணையம் குறிப்பிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.தற்போதய ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பிற்கான முயற்சிகளையே முன்னெடுக்கின்றார். தேர்தல்கள் ஆணையத்திற்கு மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் தேர்தலை வைப்பதற்கு கெசட் அறிக்கை வெளியிடப்படவில்லை என பல காரணங்களை ஜனாதிபதி கூறி கொண்டு வருவதாக கிங்ஸ் நெல்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.மார்ச் மாதம் கண்டிப்பாக தேர்தல் வைக்க வேண்டும் எனவும் கிங்ஸ் நெல்சன் வலியுறுத்தியுள்ளார்.நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து நாட்டிலுள்ள புத்திசாலிகள் என்ன சிந்திக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், அதே போன்று தேசிய மக்கள் சக்தி குறித்து கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.மற்றும் நாட்டில் விவசாயம் பொலனறுவை பகுதியில் வயல்கள் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. அன்று உரங்களை பரீசிலனை செய்து பயன் படுத்த சொல்லி ஆனால் இன்று அரிசி இல்லை விவசாயிகளின் நிலை பாரிய பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.விவசாய அமைச்சர் விவசாயிகளின் பாதிப்புக்கு முதல் வழங்குவதாக கூறினார்கள். ஆனால் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement