• May 18 2024

இலங்கை தேயிலைக்கு ஏற்பட்ட நிலை! SamugamMedia

Tea
Chithra / Mar 12th 2023, 7:28 am
image

Advertisement

தேசிய தேயிலை விலை கடந்த ஜனவரி மாதத்துடன் பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 28 ரூபா 56 சதத்தினால் வீழ்ச்சியை பதிவு செய்து சராசரியாக 1438 ரூபா 20 சதத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக தரகர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேயிலை விலை உயர்வு தன்மையை காட்டியுள்ளது.

இதேவேளை, ரூபாவின் மதிப்பேற்றம் காரணமாக, தேயிலை சந்தையில் வீழ்ச்சி ஏற்படுவதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வருவதால், ஒட்டுமொத்த ஏற்றுமதித் துறையும் பாதிக்கப்படுகிறது.


இந்த நிலைமையானது, தேயிலை சந்தைக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பச்சைக் கொழுந்துக்காக செலுத்தப்படும் மேலதிக கொடுப்பனவை இடைநிறுத்த வேண்டியேற்படும்.

அதேநேரம், மின் கட்டணம் அதிகரித்துள்ளமையால், தொழிற்சாலை செலவுகளும் அதிகரித்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலைக்கு ஏற்பட்ட நிலை SamugamMedia தேசிய தேயிலை விலை கடந்த ஜனவரி மாதத்துடன் பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 28 ரூபா 56 சதத்தினால் வீழ்ச்சியை பதிவு செய்து சராசரியாக 1438 ரூபா 20 சதத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக தரகர்கள் குறிப்பிடுகின்றனர்.எவ்வாறாயினும் கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேயிலை விலை உயர்வு தன்மையை காட்டியுள்ளது.இதேவேளை, ரூபாவின் மதிப்பேற்றம் காரணமாக, தேயிலை சந்தையில் வீழ்ச்சி ஏற்படுவதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வருவதால், ஒட்டுமொத்த ஏற்றுமதித் துறையும் பாதிக்கப்படுகிறது.இந்த நிலைமையானது, தேயிலை சந்தைக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக, பச்சைக் கொழுந்துக்காக செலுத்தப்படும் மேலதிக கொடுப்பனவை இடைநிறுத்த வேண்டியேற்படும்.அதேநேரம், மின் கட்டணம் அதிகரித்துள்ளமையால், தொழிற்சாலை செலவுகளும் அதிகரித்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement