• Jun 02 2024

இலங்கையில் லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி: திரையரங்கை முற்றுகையிட்ட ரசிகர்கள்..! samugammedia

Chithra / Oct 23rd 2023, 12:01 pm
image

Advertisement

 

வடபகுதியிலிருந்து  நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகிய லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

அனுராதபுரம் பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள திரையரங்கம் ஒன்றில் லியோ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக இணையத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, புத்தளம், திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து பெரும்பாலோனோர் முற்பதிவுகளை செய்து திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட சமயத்தில் பட காட்சிகளின் ஒலியமைப்பு தெளிவின்மை காணப்பட்டதுடன் பல மணிநேரமாக தொழிநுட்ப பிரச்சனை  இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தமக்கு தெளிவான ஒலியமைப்புடன் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும் அல்லது பணத்தினை மீளத்தருமாறு திரையரங்களில் வரவேற்பு இடத்தினை முற்றுகையிட்டனர்.

இதனால் திரையரங்கில் பதற்ற நிலமை அதிகரித்தமையுடன் அனுராதபுரம் பொலிஸார் வருகை தந்து திரையரங்கின் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.

இது குறித்து திரையரங்க நிர்வாகம் தெரிவிக்கையில், 

படத்தின் இறுவட்டில் உள்ள பிரச்சனையினால் ஒலி தெளிவின்மை காணப்படுவதாகவும் பணத்தினை கணக்கிற்கு வைப்பிடுவதாகவும் தெரிவித்தனர்.

எனினும் திரையரங்க நிர்வாகத்தினர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துடன் பணத்தினை கையில் தருமாறும்  ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதியில் பொலிஸாரின் தலையீட்டில் நிர்வாகத்தினர் சில தினங்களில் வங்கிக்கு பணத்தினை வைப்பிலிடுவதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை எழுதி வழங்கியதுடன் தவறுக்கு மன்னிப்பும் கோரி தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியிருந்தனர்.

இச் சம்பவத்தால் சுமார் 150 கிலோமீற்றர் தூரத்திற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து வருகை தந்த ரசிகர்களுக்கு பண விரயமும் மிகுந்த ஏமாற்றமும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி: திரையரங்கை முற்றுகையிட்ட ரசிகர்கள். samugammedia  வடபகுதியிலிருந்து  நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகிய லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.அனுராதபுரம் பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள திரையரங்கம் ஒன்றில் லியோ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக இணையத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, புத்தளம், திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து பெரும்பாலோனோர் முற்பதிவுகளை செய்து திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.இந்நிலையில் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட சமயத்தில் பட காட்சிகளின் ஒலியமைப்பு தெளிவின்மை காணப்பட்டதுடன் பல மணிநேரமாக தொழிநுட்ப பிரச்சனை  இருந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தமக்கு தெளிவான ஒலியமைப்புடன் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும் அல்லது பணத்தினை மீளத்தருமாறு திரையரங்களில் வரவேற்பு இடத்தினை முற்றுகையிட்டனர்.இதனால் திரையரங்கில் பதற்ற நிலமை அதிகரித்தமையுடன் அனுராதபுரம் பொலிஸார் வருகை தந்து திரையரங்கின் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.இது குறித்து திரையரங்க நிர்வாகம் தெரிவிக்கையில், படத்தின் இறுவட்டில் உள்ள பிரச்சனையினால் ஒலி தெளிவின்மை காணப்படுவதாகவும் பணத்தினை கணக்கிற்கு வைப்பிடுவதாகவும் தெரிவித்தனர்.எனினும் திரையரங்க நிர்வாகத்தினர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துடன் பணத்தினை கையில் தருமாறும்  ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இறுதியில் பொலிஸாரின் தலையீட்டில் நிர்வாகத்தினர் சில தினங்களில் வங்கிக்கு பணத்தினை வைப்பிலிடுவதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை எழுதி வழங்கியதுடன் தவறுக்கு மன்னிப்பும் கோரி தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியிருந்தனர்.இச் சம்பவத்தால் சுமார் 150 கிலோமீற்றர் தூரத்திற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து வருகை தந்த ரசிகர்களுக்கு பண விரயமும் மிகுந்த ஏமாற்றமும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement