• May 19 2024

நாட்டில் 41 இலட்சம் குடும்பங்களுக்கு நேர்ந்துள்ள நிலை - வெளியான திடுக்கிடும் ஆய்வு அறிக்கை SamugamMedia

Chithra / Mar 20th 2023, 10:29 pm
image

Advertisement

தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது

இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் 43 வீதமான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடும் பணத்தை குறைத்து அந்த பணத்தை உணவுக்காக பயன்படுத்தியதாகவும் மேலும் 35 வீதமான குடும்பங்கள் சேமித்த பணத்தை அல்லது கடனை செலுத்த தவறியதன் மூலம் அப்பணத்தை கொண்டு உணவு தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் எரிபொருள் தேவையான ஜனவரியில் 11 வீதத்திலிருந்து 6 வீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பொருட்களின் தேவையானது 87 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் 41 இலட்சம் குடும்பங்களுக்கு நேர்ந்துள்ள நிலை - வெளியான திடுக்கிடும் ஆய்வு அறிக்கை SamugamMedia தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறதுஇலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.இலங்கையில் 43 வீதமான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடும் பணத்தை குறைத்து அந்த பணத்தை உணவுக்காக பயன்படுத்தியதாகவும் மேலும் 35 வீதமான குடும்பங்கள் சேமித்த பணத்தை அல்லது கடனை செலுத்த தவறியதன் மூலம் அப்பணத்தை கொண்டு உணவு தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் எரிபொருள் தேவையான ஜனவரியில் 11 வீதத்திலிருந்து 6 வீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பொருட்களின் தேவையானது 87 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement