• Jun 15 2024

துருக்கியில், இளைஞனை காப்பாற்றிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!

Tamil nila / Feb 11th 2023, 10:37 am
image

Advertisement

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக  மாணவர்  வாட்ஸ்அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் மூலம் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்த பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டார். 


குபாத் என்ற மாணவர்க மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரான மாலத்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். இந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்ப்பவர்கள், தயவுசெய்து வந்து உதவுங்கள். தயவுசெய்து அனைவரும் வந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று குபாத் வீடியோவில் கூறியுள்ளார்.


தனது தாயின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர்கள் இரண்டாவது மாடியில் உள்ள எஃப்ரூஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் குபாத் கூறினார். 


என்னால் என் மாமா எங்கிருக்கிறார் என்பது சரியாக தெரியவில்லை, என்று 20 வயதான குபாத் மேலும் கூறினார். அவசர சேவை பிரிவினர் குபத்தை கண்டுபிடித்தனர்., மேலும் அவர் தனது தாயுடன் மீட்கப்பட்டார். இருப்பினும், அவரது மாமா மற்றும் பாட்டி இன்னும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியனர்.


பின்னர், அனடோலு ஏஜென்சியிடம் பேசிய குபத், தனது ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் கழிப்பதற்காக மீண்டும் மாலத்யாவுக்கு வந்ததாகக் கூறினார்.


இரவு உறங்கச் சென்ற பிறகு முதல் நிலநடுக்கத்தில் அவரது குடும்பத்தினர் சிக்கியதாக குபாத் கூறினார். நிலநடுக்கத்தின் போது நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென குலுங்கியது, நான் கண்களைத் திறந்தவுடன் என் தலையைத் தாழ்த்தி பார்த்தேன். என் அம்மா என் அருகில் விழுந்ததைக் கண்டேன், என்று கூறிய பல்கலைக்கழக மாணவர் தனது தொலைபேசி தன்னிடம் இருந்ததாக கூறினார், மேலும் அவர் உடனடியாகவும் அதை எடுத்து தனது நண்பர்களை அழைக்க முயற்சி செய்ததாக கூறினார். 


என்னுடைய நண்பர்கள் அனைவரும் என வாட்ஸப் ஸ்டேடஸைப் பார்த்தால், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டால், அவர்கள் அனைவரும் தன்னை காப்பாற்ற வரலாம் என்று தான் நம்பியதாக அவர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


அவர் ஐந்தரை முதல் ஆறு மணி நேரம் வரை இடிபாடுகளுக்கு அடியில் இருந்ததாகவும், அவரது நண்பர்கள் ஸ்லெட்ஜ்ஹாம்மரைப் பயன்படுத்தி இடிபாடிகளின் மீது சரியான இடத்தைத் கண்டுபிடித்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கண்டுபிடித்ததாகவும் குபாத் கூறினார். 


துருக்கியில், இளைஞனை காப்பாற்றிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக  மாணவர்  வாட்ஸ்அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் மூலம் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்த பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டார். குபாத் என்ற மாணவர்க மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரான மாலத்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். இந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்ப்பவர்கள், தயவுசெய்து வந்து உதவுங்கள். தயவுசெய்து அனைவரும் வந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று குபாத் வீடியோவில் கூறியுள்ளார்.தனது தாயின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர்கள் இரண்டாவது மாடியில் உள்ள எஃப்ரூஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் குபாத் கூறினார். என்னால் என் மாமா எங்கிருக்கிறார் என்பது சரியாக தெரியவில்லை, என்று 20 வயதான குபாத் மேலும் கூறினார். அவசர சேவை பிரிவினர் குபத்தை கண்டுபிடித்தனர்., மேலும் அவர் தனது தாயுடன் மீட்கப்பட்டார். இருப்பினும், அவரது மாமா மற்றும் பாட்டி இன்னும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியனர்.பின்னர், அனடோலு ஏஜென்சியிடம் பேசிய குபத், தனது ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் கழிப்பதற்காக மீண்டும் மாலத்யாவுக்கு வந்ததாகக் கூறினார்.இரவு உறங்கச் சென்ற பிறகு முதல் நிலநடுக்கத்தில் அவரது குடும்பத்தினர் சிக்கியதாக குபாத் கூறினார். நிலநடுக்கத்தின் போது நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென குலுங்கியது, நான் கண்களைத் திறந்தவுடன் என் தலையைத் தாழ்த்தி பார்த்தேன். என் அம்மா என் அருகில் விழுந்ததைக் கண்டேன், என்று கூறிய பல்கலைக்கழக மாணவர் தனது தொலைபேசி தன்னிடம் இருந்ததாக கூறினார், மேலும் அவர் உடனடியாகவும் அதை எடுத்து தனது நண்பர்களை அழைக்க முயற்சி செய்ததாக கூறினார். என்னுடைய நண்பர்கள் அனைவரும் என வாட்ஸப் ஸ்டேடஸைப் பார்த்தால், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டால், அவர்கள் அனைவரும் தன்னை காப்பாற்ற வரலாம் என்று தான் நம்பியதாக அவர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.அவர் ஐந்தரை முதல் ஆறு மணி நேரம் வரை இடிபாடுகளுக்கு அடியில் இருந்ததாகவும், அவரது நண்பர்கள் ஸ்லெட்ஜ்ஹாம்மரைப் பயன்படுத்தி இடிபாடிகளின் மீது சரியான இடத்தைத் கண்டுபிடித்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கண்டுபிடித்ததாகவும் குபாத் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement