• May 18 2024

கிராஞ்சி கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கியது யார்?- நேஸன் கேள்வி!

Sharmi / Dec 1st 2022, 5:24 pm
image

Advertisement

கடந்த 28.11.2022 அன்று கிராஞ்சி, இலவன்குடாவினைச் சேர்ந்த மீனவர்கள் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக  தொடர்போராடடத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்த போராட்டத்தின் 61வது நாளினை கொழும்பிலுள்ள மக்களுக்கு எடுத்துக்கூறி இதனூடாக கிராஞ்சி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரிய பயணத்தினை ஆரம்பித்திருந்தோம். அங்கு நாம் அரகல செய்வதற்கு வந்திருக்கிறோம் என்று கூறி  எங்களின் கருத்தினை கூற விடாமல் சிங்கள அரசியல்வாதிகளால் கூலி அடியாட்கள் கொண்டு துரத்தப்பட்டோம்  என தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகன் நேஸன் தெரிவித்தார் நேற்றையதினம் புத்தளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

எங்கள் நாட்டிலிருந்து 200 கிலோ மீற்றர் கடல் பிரதேசம் எமது இலங்கைக்கு  சொந்தமானது. இதனூடாக வருகின்ற வருமானம் எம்மைத் தான் சேர வேண்டும்.அது வெளிநாடுகளுக்கு அல்ல. உண்மையில் எங்கள் நீலப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால் மாத்திரமே நாட்டின் கடனை முற்றுமுழுதாக ஒரு வருடத்திற்குள் அடைத்துவிட முடியும். ஆனால் இன்று எங்கள் நீலப்பொருளாதாரத்தை விலை பேசி சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விற்ற  வரலாறுகள் தான் இருக்கின்றதே தவிர எங்கள் வருவாய்களை வேற்று நாடுகளுக்கு விற்கப்படுகின்றதனை தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்கள் உணவு வட்டாரத்திற்குள்ளேயே இல்லாத கடலட்டை பண்ணையினை இவர்கள் உற்பத்தி செய்வது சீனா, ஜப்பான் போன்ற தென்னாசிய நாடுகளுக்காக செய்கிறார்கள். எங்களுக்கு தேவையான கருவாடு, மீன்கள், இறால்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற கடல் பிரதேசங்கள் கடலட்டை பண்ணைகளால் சூழ்ந்து காணப்டுகிறது.

மீனவர்களின் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சுற்றி வேலி அடைத்து வைத்திருக்கிறார்கள்.

கிராஞ்சி மீனவர்கள் தகவல் அறியும் சட்டகோவையின்படி அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்னவெனில் கிராஞ்சி கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதா? என்று பிரதேச செயகத்தினை கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதேச செயலத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று அதன் அறிக்கையில் இருந்து. இருந்தும் 400 கடலட்டை பண்ணைகள் அமைக்கப்ட்டிருக்கின்றன. இலங்கையின் சட்டமூலங்களை யார் கையாள்வது ? பிரதேச செயலகத்தினை கையில் வைத்திருப்பது டக்ளஸ் தேவானந்தாவா? என்று நாங்கள் கேட்கின்றோம்.

நேற்றைய தின போராட்டத்தில் வெறும் 5 ஆயிரம் ரூபாய் பணத்திற்க்காகவும், சாப்பாடு பொதிக்கும், கால் போத்தல் சாராயத்திற்க்காகவும் குண்டர்கள் எங்களை அவதூறாக பேசினார்கள் வந்திருந்த பெண்களையும் அவதூறாக பேசினார்கள்.உங்கள் கூற்றுக்களை உங்கள் வட பகுதிகளில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள் . நீங்கள் இங்கு வர கூடாது என்று அந்த போராட்டக்காரர்களை எச்சரித்தவர்கள் யார்?

நாங்கள் தேசியத்தில் ஒன்றிணைந்து  பயணிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது எங்களை தனித்து ,தனியான இனம், தனியாக வாழுங்கள் என்று வெளிப்படையாக கூறுகிறீர்களா?என்று நாங்கள் கேட்க வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகளை எந்தவித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்து இருக்கின்றார்.வெறுமனே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளை அழைப்பதால் இந்த இனப்பிரச்சனைக்கு தீர்வாக இருந்து விட முடியாது. தமிழ் அரசியல்வாதிகள் யுத்தம் முடிந்து 13 வருடங்களாக அவர்கள் செய்த எந்த காரியமும் தமிழ் மக்களை திருப்திப்பட வைக்கவில்லை ,இதனை நாம் கூறி வந்திருக்கிறோம். எனவே தமிழர் விடயத்தில் ஒரு தீர்வு எடுக்க வேண்டுமானால்  வடக்கு, கிழக்கு வாழ் சிவில் சமூக பிரதிநிதிகளையும் , ஏனைய சிவில் அமைப்புக்களையும் ,தமிழ் தேசியம் சார்ந்து குரல் எழுப்புகின்ற அனைத்து தரப்பினர்களையும் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைத்து உரையாட  வேண்டும்.

எங்கள் கடல்வளம்  சூறையாடப்படுவது மாத்திரம் அல்ல இந்த  பின்னணியில்  என்று நாங்கள் சந்தேகப்டுகின்றோம் .கடற்படையினர், இராணுவப்படையினர் இருந்தும் அவர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களின் ஆதரவுடன் தான் வுறுகிறார்கள் விடுதலை போராட்டத்தின் கால கட்டத்தில் எங்கள் கடல்வளம் பாதுகாப்பாக இருந்தது.அத்துமீறி எந்த அந்நிய நாடும் வரவில்லை .இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளப்ட்டிருக்கிறது என தெரிவித்தார்.

கிராஞ்சி கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கியது யார்- நேஸன் கேள்வி கடந்த 28.11.2022 அன்று கிராஞ்சி, இலவன்குடாவினைச் சேர்ந்த மீனவர்கள் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக  தொடர்போராடடத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்த போராட்டத்தின் 61வது நாளினை கொழும்பிலுள்ள மக்களுக்கு எடுத்துக்கூறி இதனூடாக கிராஞ்சி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரிய பயணத்தினை ஆரம்பித்திருந்தோம். அங்கு நாம் அரகல செய்வதற்கு வந்திருக்கிறோம் என்று கூறி  எங்களின் கருத்தினை கூற விடாமல் சிங்கள அரசியல்வாதிகளால் கூலி அடியாட்கள் கொண்டு துரத்தப்பட்டோம்  என தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகன் நேஸன் தெரிவித்தார் நேற்றையதினம் புத்தளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் நாட்டிலிருந்து 200 கிலோ மீற்றர் கடல் பிரதேசம் எமது இலங்கைக்கு  சொந்தமானது. இதனூடாக வருகின்ற வருமானம் எம்மைத் தான் சேர வேண்டும்.அது வெளிநாடுகளுக்கு அல்ல. உண்மையில் எங்கள் நீலப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால் மாத்திரமே நாட்டின் கடனை முற்றுமுழுதாக ஒரு வருடத்திற்குள் அடைத்துவிட முடியும். ஆனால் இன்று எங்கள் நீலப்பொருளாதாரத்தை விலை பேசி சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விற்ற  வரலாறுகள் தான் இருக்கின்றதே தவிர எங்கள் வருவாய்களை வேற்று நாடுகளுக்கு விற்கப்படுகின்றதனை தான் காணக்கூடியதாக இருக்கின்றது.எங்கள் உணவு வட்டாரத்திற்குள்ளேயே இல்லாத கடலட்டை பண்ணையினை இவர்கள் உற்பத்தி செய்வது சீனா, ஜப்பான் போன்ற தென்னாசிய நாடுகளுக்காக செய்கிறார்கள். எங்களுக்கு தேவையான கருவாடு, மீன்கள், இறால்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற கடல் பிரதேசங்கள் கடலட்டை பண்ணைகளால் சூழ்ந்து காணப்படுகிறது.மீனவர்களின் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சுற்றி வேலி அடைத்து வைத்திருக்கிறார்கள்.கிராஞ்சி மீனவர்கள் தகவல் அறியும் சட்டகோவையின்படி அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்னவெனில் கிராஞ்சி கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதா என்று பிரதேச செயகத்தினை கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதேச செயலத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று அதன் அறிக்கையில் இருந்தது. இருந்தும் 400 கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் சட்டமூலங்களை யார் கையாள்வது பிரதேச செயலகத்தினை கையில் வைத்திருப்பது டக்ளஸ் தேவானந்தாவா என்று நாங்கள் கேட்கின்றோம்.நேற்றைய தின போராட்டத்தில் வெறும் 5 ஆயிரம் ரூபாய் பணத்திற்க்காகவும், சாப்பாடு பொதிக்கும், கால் போத்தல் சாராயத்திற்க்காகவும் குண்டர்கள் எங்களை அவதூறாக பேசினார்கள் வந்திருந்த பெண்களையும் அவதூறாக பேசினார்கள்.உங்கள் கூற்றுக்களை உங்கள் வட பகுதிகளில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள் . நீங்கள் இங்கு வர கூடாது என்று அந்த போராட்டக்காரர்களை எச்சரித்தவர்கள் யார்நாங்கள் தேசியத்தில் ஒன்றிணைந்து  பயணிக்க நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது எங்களை தனித்து ,தனியான இனம், தனியாக வாழுங்கள் என்று வெளிப்படையாக கூறுகிறீர்களாஎன்று நாங்கள் கேட்க வேண்டும்.தமிழ் அரசியல்வாதிகளை எந்தவித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்து இருக்கின்றார்.வெறுமனே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளை அழைப்பதால் இந்த இனப்பிரச்சனைக்கு தீர்வாக இருந்து விட முடியாது. தமிழ் அரசியல்வாதிகள் யுத்தம் முடிந்து 13 வருடங்களாக அவர்கள் செய்த எந்த காரியமும் தமிழ் மக்களை திருப்திப்பட வைக்கவில்லை ,இதனை நாம் கூறி வந்திருக்கிறோம். எனவே தமிழர் விடயத்தில் ஒரு தீர்வு எடுக்க வேண்டுமானால்  வடக்கு, கிழக்கு வாழ் சிவில் சமூக பிரதிநிதிகளையும் , ஏனைய சிவில் அமைப்புக்களையும் ,தமிழ் தேசியம் சார்ந்து குரல் எழுப்புகின்ற அனைத்து தரப்பினர்களையும் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைத்து உரையாட  வேண்டும்.எங்கள் கடல்வளம்  சூறையாடப்படுவது மாத்திரம் அல்ல இந்த  பின்னணியில்  என்று நாங்கள் சந்தேகப்படுகின்றோம் .கடற்படையினர், இராணுவப்படையினர் இருந்தும் அவர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களின் ஆதரவுடன் தான் வுறுகிறார்கள் விடுதலை போராட்டத்தின் கால கட்டத்தில் எங்கள் கடல்வளம் பாதுகாப்பாக இருந்தது.அத்துமீறி எந்த அந்நிய நாடும் வரவில்லை .இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement