• May 21 2024

மே18ஆம் திகதியை தொல்லியல் திணைக்களம் அறிவித்தது ஏன்.?? – சுகாஸ் காட்டம்.! samugammedia

Sharmi / May 15th 2023, 4:51 pm
image

Advertisement

தமிழ் மக்களுடைய இனத்துவ அடையாளங்களை, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு ரீதியில் தொடர்ந்து அழித்து வருகின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசு, அதனுடைய இன்னுமொரு பரிநாமமாக கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தையும் குறிவைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள உருத்திரபுரஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே க.சுகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதியன்று தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகளிற்காக வருகை தர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது.

இது எந்தவொரு கையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது அனுமதிக்கப்படவோ முடியாத ஒரு விடயம்.இலங்கையில் தற்பொழுது இருக்கின்ற ஏழு ஈச்சரங்களில் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரீச்சரம். இது வரலாற்று காலம் தொட்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட நாகர் காலத்திலிருந்து தமிழ் மக்களாலும், சைவ மக்களாலும் வழிபட்டு வரப்பட்ட புனிதமான பிரதேசம்.

இந்த புனிதமான சைவ ஆலயச் சூழலில் தொல்பியல் திணைக்களம் அளவீட்டு பணிகளிற்காக வருவதாக அறிவித்திருப்பது என்பது தமிழ் மக்களை பொறுத்த வரையில் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என தெரிவித்தார்.

மே18ஆம் திகதியை தொல்லியல் திணைக்களம் அறிவித்தது ஏன். – சுகாஸ் காட்டம். samugammedia தமிழ் மக்களுடைய இனத்துவ அடையாளங்களை, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு ரீதியில் தொடர்ந்து அழித்து வருகின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசு, அதனுடைய இன்னுமொரு பரிநாமமாக கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தையும் குறிவைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள உருத்திரபுரஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே க.சுகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதியன்று தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகளிற்காக வருகை தர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. இது எந்தவொரு கையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது அனுமதிக்கப்படவோ முடியாத ஒரு விடயம்.இலங்கையில் தற்பொழுது இருக்கின்ற ஏழு ஈச்சரங்களில் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரீச்சரம். இது வரலாற்று காலம் தொட்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட நாகர் காலத்திலிருந்து தமிழ் மக்களாலும், சைவ மக்களாலும் வழிபட்டு வரப்பட்ட புனிதமான பிரதேசம்.இந்த புனிதமான சைவ ஆலயச் சூழலில் தொல்பியல் திணைக்களம் அளவீட்டு பணிகளிற்காக வருவதாக அறிவித்திருப்பது என்பது தமிழ் மக்களை பொறுத்த வரையில் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement