• May 18 2024

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தபட்ட ஏன்? – மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பா..? samugammedia

Chithra / May 15th 2023, 10:31 am
image

Advertisement

கொழும்பு பல்கலைகழகத்தை சுற்றி திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாக கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சதி நடப்பதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும் அது தொடர்பில் முறையான விழிப்புணர்வு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முறையான விசாரணை இல்லாமல் எந்த விமர்சனமும் செய்ய முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு பல்கலைகழகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு காரணமான பல விடயங்கள் கூறப்பட்டாலும், முறையான விசாரணைகளை நடத்தி சரியான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக கலை பீட கலாநிதி சங்கத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தபட்ட ஏன் – மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பா. samugammedia கொழும்பு பல்கலைகழகத்தை சுற்றி திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாக கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சதி நடப்பதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும் அது தொடர்பில் முறையான விழிப்புணர்வு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.முறையான விசாரணை இல்லாமல் எந்த விமர்சனமும் செய்ய முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.கொழும்பு பல்கலைகழகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு காரணமான பல விடயங்கள் கூறப்பட்டாலும், முறையான விசாரணைகளை நடத்தி சரியான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக கலை பீட கலாநிதி சங்கத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement