• May 13 2024

அமைச்சரை மாற்றுவதால் தீர்வு கிடைத்துவிடுமா..? சீற்றத்துடன் கேள்வியெழுப்பிய ஜீ.எல்.பீரிஸ்! samugammedia

Chithra / Oct 23rd 2023, 4:07 pm
image

Advertisement

 

நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதவி மாற்றமானது தலை வலிக்குத் தலையனையை மாற்றுவது போன்றது. இவை அனைத்து கண் கட்டு வித்தை. இவை மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.

நாட்டில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கு ஒரு அமைச்சரை மாற்றி இன்னொரு அமைச்சரை நியமிப்பதன் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறினால் இதனை நம்ப முடியுமா?

சங்கீதக் கதிரை விளையாட்டே இதில் இடம்பெறுகின்றது.

மக்களின் எதிர்ப்பு எரிமலையை போன்று எரியும் சந்தர்ப்பத்தில் மக்களுக்கு அரசாங்கத்தின் பதில் இதுவாய் இருக்கின்றது.

வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதே இதற்கான சரியான தீர்வு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அமைச்சரை மாற்றுவதால் தீர்வு கிடைத்துவிடுமா. சீற்றத்துடன் கேள்வியெழுப்பிய ஜீ.எல்.பீரிஸ் samugammedia  நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பதவி மாற்றமானது தலை வலிக்குத் தலையனையை மாற்றுவது போன்றது. இவை அனைத்து கண் கட்டு வித்தை. இவை மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.நாட்டில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கு ஒரு அமைச்சரை மாற்றி இன்னொரு அமைச்சரை நியமிப்பதன் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறினால் இதனை நம்ப முடியுமாசங்கீதக் கதிரை விளையாட்டே இதில் இடம்பெறுகின்றது.மக்களின் எதிர்ப்பு எரிமலையை போன்று எரியும் சந்தர்ப்பத்தில் மக்களுக்கு அரசாங்கத்தின் பதில் இதுவாய் இருக்கின்றது.வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதே இதற்கான சரியான தீர்வு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement