• May 13 2024

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு பீபா தடை விதிக்குமா? ரஞ்சித் ரொட்றிகோ கேள்வி!

Tamil nila / Dec 31st 2022, 7:12 pm
image

Advertisement

இலங்கையில், எந்தவொரு விளையாட்டுத்துறை சம்மேளனத்திலும் எந்தவொரு பதவியையும் யூ. எல். ஜஸ்வர் வகிப்பது பொருத்தமானதல்ல என விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பரிந்துரையை கருத்தில் கொள்ளாமல் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தல் குழு எவ்வாறு அவரது தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டது என சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ கேள்வி எழுப்பினார்.


கொட்டாஞ்சேனை, ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக்கழக கேட்போர் கூடத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு பீபா தடை விதிக்குமா என்ற தொணிப்பொருளில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே ரஞ்சித் ரொட்றிகோ இந்தக் கேள்வியை எழுப்பினார். 


இலங்கை, கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2014/15 வருடத்துக்கான கணக்காய்வு அறிக்கையின் வினவல் தொடர்பான எழுத்துமூல ஆவணத்தை அப்போது தலைவர் பதவியில் இருந்த அநுர டி சில்வாவுக்கோ, சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கோ தெரியாமல் செயலாளர் நாயகமாக பதவி வகித்த ஜஸ்வர் உமர் கோப் குழுவிடம் 2017 இல் சமர்ப்பித்திருந்தார்.


இது தொடர்பான அறிக்கையொன்றை விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கோப் குழுவினர் சமர்ப்பித்திருந்தனர்.


இதனையடுத்து விசாரணை நடத்திய விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளராக பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அவர் (யூ. எல். ஜஸ்வர்) எந்தவொரு விளையாட்டுத்துறை சம்மேளனத்திலும் எந்தவொரு பதவியையும் வகிப்பது பொருத்தமானதல்ல என பரிந்துரை செய்து, விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ.ஜே.எம். பொன்சேகா தனது கையொப்பத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளருக்கு முகவரியிட்டு 2021 ஒகஸ்ட் 18ஆம் திகதி அனுப்பிவைத்திருந்தார்.


ஆனால், அந்த பரிந்துரை அப்போதிருந்த விளையாட்டுத்துறை அமைச்சரினால் அடி தட்டில் போடப்பட்டதாக ரஞ்சித் ரொட்றிகோ கூறினார்


புதிதாக வெளியிடப்பட்ட விளையாட்டுத்துறை சட்ட விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டுத்துறை சங்கங்கள், சம்மேளனங்களில் பதவி வகிக்க முடியாது எனவும், அங்கீகரிக்கப்பட்ட குழுவினால் எவரேனும் பதவி வகிக்க பொருத்தமற்றவர் என பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


'அதற்கமைய 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுநிலை பிரதி பொலிஸ்மா அதிபர்களான உபாலி ஹேவகே, கே.பி.பி. பத்திரன ஆகியோரது வேட்பு மனுக்கள் தேர்தல் குழுவினரால் நிராகரிக்கப்பட்டது.


'ஆனால், ஜஸ்வர் உமர் எந்தவொரு விளையாட்டுத்துறை சம்மேளனத்திலும் எந்தவொரு பதவியையும் வகிப்பது பொருத்தமானதல்ல என விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் எழுத்துமூலம் முன்வைத்த பரிந்துரையை தேர்தல் குழுவினர் கருத்தில்கொள்ளத் தவறியமை அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகின்றது' என ரஞ்சித் ரொட்றிகோ சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பாக மேன்முறையீட்டுக் குழுவிடம் ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.. கோடிக்கணக்கான நிதி செலவிட்டுள்ளது.தலைவர் அலுவலகத்துக்கு 24 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.


நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரத்தை பெறாமல், ஜஸ்வர் உமர் கோடிக்கணக்கான நிதியை முறைகேடாக செலவிட்டுள்ளதாகவும் ரஞ்சித் ரொட்றிகோ சுட்டிக்காட்டினார்.


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு பீபா தடை விதிக்குமா ரஞ்சித் ரொட்றிகோ கேள்வி இலங்கையில், எந்தவொரு விளையாட்டுத்துறை சம்மேளனத்திலும் எந்தவொரு பதவியையும் யூ. எல். ஜஸ்வர் வகிப்பது பொருத்தமானதல்ல என விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பரிந்துரையை கருத்தில் கொள்ளாமல் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தல் குழு எவ்வாறு அவரது தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டது என சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ கேள்வி எழுப்பினார்.கொட்டாஞ்சேனை, ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக்கழக கேட்போர் கூடத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு பீபா தடை விதிக்குமா என்ற தொணிப்பொருளில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே ரஞ்சித் ரொட்றிகோ இந்தக் கேள்வியை எழுப்பினார். இலங்கை, கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2014/15 வருடத்துக்கான கணக்காய்வு அறிக்கையின் வினவல் தொடர்பான எழுத்துமூல ஆவணத்தை அப்போது தலைவர் பதவியில் இருந்த அநுர டி சில்வாவுக்கோ, சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கோ தெரியாமல் செயலாளர் நாயகமாக பதவி வகித்த ஜஸ்வர் உமர் கோப் குழுவிடம் 2017 இல் சமர்ப்பித்திருந்தார்.இது தொடர்பான அறிக்கையொன்றை விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கோப் குழுவினர் சமர்ப்பித்திருந்தனர்.இதனையடுத்து விசாரணை நடத்திய விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளராக பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அவர் (யூ. எல். ஜஸ்வர்) எந்தவொரு விளையாட்டுத்துறை சம்மேளனத்திலும் எந்தவொரு பதவியையும் வகிப்பது பொருத்தமானதல்ல என பரிந்துரை செய்து, விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ.ஜே.எம். பொன்சேகா தனது கையொப்பத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளருக்கு முகவரியிட்டு 2021 ஒகஸ்ட் 18ஆம் திகதி அனுப்பிவைத்திருந்தார்.ஆனால், அந்த பரிந்துரை அப்போதிருந்த விளையாட்டுத்துறை அமைச்சரினால் அடி தட்டில் போடப்பட்டதாக ரஞ்சித் ரொட்றிகோ கூறினார்புதிதாக வெளியிடப்பட்ட விளையாட்டுத்துறை சட்ட விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டுத்துறை சங்கங்கள், சம்மேளனங்களில் பதவி வகிக்க முடியாது எனவும், அங்கீகரிக்கப்பட்ட குழுவினால் எவரேனும் பதவி வகிக்க பொருத்தமற்றவர் என பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.'அதற்கமைய 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுநிலை பிரதி பொலிஸ்மா அதிபர்களான உபாலி ஹேவகே, கே.பி.பி. பத்திரன ஆகியோரது வேட்பு மனுக்கள் தேர்தல் குழுவினரால் நிராகரிக்கப்பட்டது.'ஆனால், ஜஸ்வர் உமர் எந்தவொரு விளையாட்டுத்துறை சம்மேளனத்திலும் எந்தவொரு பதவியையும் வகிப்பது பொருத்தமானதல்ல என விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் எழுத்துமூலம் முன்வைத்த பரிந்துரையை தேர்தல் குழுவினர் கருத்தில்கொள்ளத் தவறியமை அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகின்றது' என ரஞ்சித் ரொட்றிகோ சுட்டிக்காட்டினார்.இது தொடர்பாக மேன்முறையீட்டுக் குழுவிடம் ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோடிக்கணக்கான நிதி செலவிட்டுள்ளது.தலைவர் அலுவலகத்துக்கு 24 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரத்தை பெறாமல், ஜஸ்வர் உமர் கோடிக்கணக்கான நிதியை முறைகேடாக செலவிட்டுள்ளதாகவும் ரஞ்சித் ரொட்றிகோ சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement