வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.?

274

வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது.

வாழைப்பழத்தை அனைவருமே சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள், இதயநோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட எவ்வித பயமும் இல்லாமல் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

இப்போது 12 நாட்கள் தொடர்ந்து வெறும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

வாழைப்பழ டயட் என்றால் என்ன?

வாழைப்பழ டயட்டில், ஒரு நாளைக்கு 10 முதல் 12 வாழைப்பழங்களை மட்டும் உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாழைப்பழத்துடன் தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

இதே போல் வாழைப்பழம் மற்றும் தண்ணீர் இரண்டை மட்டுமே உணவாக 12 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

பின்னர் இந்த வாழைப்பழ டயட் முறையுடன், தினமும் உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

ஒவ்வொரு நாட்களும் முக்கியமாக நம் உடம்பிற்கு தேவையான ஓய்வினை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

வாழைப்பழ டயட்டினால் ஏற்படும் நன்மைகள் :

வாழைப்பழம் மற்றும் தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும்போது மனம் புத்துணர்ச்சி அடைவதுடன் உடல் எடையும் குறைகிறது.

நம் மனதில் ஏற்படும் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே தூண்டச் செய்ய இது உதவுகிறது. மேலும் நமது சருமத்தை எப்போதும் மென்மையாக மற்றும் பளபளப்பாக பாதுகாக்க உதவுகிறது.

தினமும் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு 22கி.மீ தூரம் ஓடும் அளவிற்கு உறுதியான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கிறது. இதனால் நம் கால்களில் தசைகள் வலிமை அடைகிறது.

எனவே இந்த வாழைப்பழ டயட்டானது, நம் உடல் எடை மற்றும் உடலில் உள்ள கொழுப்பையும் குறைத்து, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.

குறிப்பு :

ஒரு நாளைக்கு 10 முதல் 12 வாழைப்பழம் சாப்பிடலாம். பிறகு நமது வழக்கமான உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிடவே கூடாது. ஏனெனில் அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: