• May 03 2024

உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்ற இத்தனை ஆண்டுகள் ஆகுமா? - வெளியான பரபரப்பு தகவல்! samugammedia

Tamil nila / Jul 23rd 2023, 7:35 pm
image

Advertisement

உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை நீக்க அதிகப்பட்சமாக 757 ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

போர் தொடங்கிய நாள் முதல் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படை வீரர்கள் கண்ணி வெடிகளை புதைத்து பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த கண்ணி வெடிகளால் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பதுடன், பொதுமக்களும் தங்கள் உயிர்களை கண்ணி வெடிகளுக்கு பறிகொடுத்து வருகின்றனர்.

அதே சமயம் ரஷ்ய வீரர்களின் முன்னேற்றங்களை தடுக்கும் வகையில் உக்ரைன் ஆயுதப்படை வீரர்களும் கண்ணிவெடிகளை ஆங்காங்கே புதைத்து வைத்துள்ளனர்.

மேலும் உக்ரைனின் அனைத்து பகுதிகளிலும் புதைக்கப்பட்ட பல வகை குண்டுகள் மற்றும் ஷெல்களை முழுவதுமாக அகற்ற சுமார் 757 ஆண்டுகள் எடுக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் இந்த வேலைகளில் கிட்டத்தட்ட 500 கண்ணிவெடிகளை அகற்றும் குழுக்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் ஆய்வாளர்கள் இந்த மிக நீண்ட கால அளவினை அறிவித்துள்ளனர்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு உக்ரைன் மண்ணில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற சுமார்  $37.4 டொலர் தொகை செலவு ஆகும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்ற இத்தனை ஆண்டுகள் ஆகுமா - வெளியான பரபரப்பு தகவல் samugammedia உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை நீக்க அதிகப்பட்சமாக 757 ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.போர் தொடங்கிய நாள் முதல் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படை வீரர்கள் கண்ணி வெடிகளை புதைத்து பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த கண்ணி வெடிகளால் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பதுடன், பொதுமக்களும் தங்கள் உயிர்களை கண்ணி வெடிகளுக்கு பறிகொடுத்து வருகின்றனர்.அதே சமயம் ரஷ்ய வீரர்களின் முன்னேற்றங்களை தடுக்கும் வகையில் உக்ரைன் ஆயுதப்படை வீரர்களும் கண்ணிவெடிகளை ஆங்காங்கே புதைத்து வைத்துள்ளனர்.மேலும் உக்ரைனின் அனைத்து பகுதிகளிலும் புதைக்கப்பட்ட பல வகை குண்டுகள் மற்றும் ஷெல்களை முழுவதுமாக அகற்ற சுமார் 757 ஆண்டுகள் எடுக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதுவும் இந்த வேலைகளில் கிட்டத்தட்ட 500 கண்ணிவெடிகளை அகற்றும் குழுக்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் ஆய்வாளர்கள் இந்த மிக நீண்ட கால அளவினை அறிவித்துள்ளனர்.அடுத்த பத்தாண்டுகளுக்கு உக்ரைன் மண்ணில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற சுமார்  $37.4 டொலர் தொகை செலவு ஆகும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement