• Nov 26 2024

26 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறையா..? ஆசிரியர் சங்கம் எடுத்த அதிரடித் தீர்மானம்

Chithra / Jun 19th 2024, 9:15 am
image

 

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என அதன் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (18) நடைபெற்ற வைபவமொன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் இணைத் தலைவர்  தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.

இதேவேளை, இன்று முதல் பல்கலைக்கழகத்திற்கு  சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் சத்தியாக்கிரக போராட்டத்தை கொழும்புக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறையா. ஆசிரியர் சங்கம் எடுத்த அதிரடித் தீர்மானம்  எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என அதன் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.எவ்வாறாயினும், ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (18) நடைபெற்ற வைபவமொன்றில் தெரிவித்தார்.இதேவேளை, சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் இணைத் தலைவர்  தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.இதேவேளை, இன்று முதல் பல்கலைக்கழகத்திற்கு  சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் சத்தியாக்கிரக போராட்டத்தை கொழும்புக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement