• May 19 2024

தமிழ் மக்கள் செறிந்துவாழும் கொம்பனித்தெருவின் பெயரில் மாற்றமா..? - அமைச்சரின் அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / May 22nd 2023, 10:39 pm
image

Advertisement

கொம்பனித்தெருவின் பெயர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 'கொம்பன்ன வீதி' என்று மாற்றப்பட்டாலும் அது தமிழில் கொம்பனித் தெரு என்றே இருக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதியில், அவர்கள் நீண்டகாலம் பாவனையில் வைத்திருந்த பெயரை அதிகாரிகள் நினைத்த நினைத்தபடி மாற்றுவது தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர், கொம்பனித் தெரு என்ற பெயரை மாற்றக்கூடாதென்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டாரென அறியமுடிந்தது.

அதேபோல விசேட அதிரடிப்படை உட்பட்ட அரச பாதுகாப்புத்துறை ஆட்சேர்ப்பில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியதாக மேலும் தெரியவந்துள்ளது.

தமிழ் மக்கள் செறிந்துவாழும் கொம்பனித்தெருவின் பெயரில் மாற்றமா. - அமைச்சரின் அதிரடி நடவடிக்கை samugammedia கொம்பனித்தெருவின் பெயர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 'கொம்பன்ன வீதி' என்று மாற்றப்பட்டாலும் அது தமிழில் கொம்பனித் தெரு என்றே இருக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதியில், அவர்கள் நீண்டகாலம் பாவனையில் வைத்திருந்த பெயரை அதிகாரிகள் நினைத்த நினைத்தபடி மாற்றுவது தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர், கொம்பனித் தெரு என்ற பெயரை மாற்றக்கூடாதென்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டாரென அறியமுடிந்தது.அதேபோல விசேட அதிரடிப்படை உட்பட்ட அரச பாதுகாப்புத்துறை ஆட்சேர்ப்பில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியதாக மேலும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement