• May 18 2024

53ஆவது ஐ.நா அமர்விலாவது தீர்வு கிடைக்குமா?- வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கண்ணீர்..!samugammedia

Sharmi / Jun 24th 2023, 1:58 pm
image

Advertisement

தற்பொழுது இடம்பெறும் 53 ஆவது ஐ.நா. அமர்விலாவது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், ஊடகங்கள் ஒடுக்கப்பட்டால் மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு விடும் எனவும் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது 53 ஆவது ஐ.நா அமர்வு ஆரம்பித்துள்ளது. அதில் எமது பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகள் இம் முறையாவது  கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.எமது பிள்ளைகள் சரணடைந்து  14 வருடம் ஆகின்றது. ஆயினும் இது வரை எமது நாட்டில் நீதி கிடைக்கப் பெறாமையால்  சர்வதேசத்தினை குறிப்பாக ஐ.நாவை நம்பியுள்ளோம்.

அதனால் ஐ.நாவை கையெடுத்து கும்பிடுகின்றோம். எமது பிள்ளைகள் எங்குள்ளார்கள் என்பது தொடர்பாக எமக்கு விமோசனம் கிடைக்க வேண்டும்.

இத்தனை வருடமாக பிள்ளைகளை தேடி அலைந்த  150 ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இறந்து விட்டனர். நாமும்  ஏங்கி தவித்து இறுதியில் மடிந்து விடும்  கட்டத்திலே உள்ள எமக்கு  ஐ.நா எமக்கு ஏமாற்றத்தினை தர கூடாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி  இத்தனை காலமாக வீதிகளில் நின்று அரசாங்கத்தை மண்டியிட்டு கேட்டு  வருகின்றோம்.

ஆகவே எமது பிரச்சினையை முதலாவதாக கொண்டு தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் எமது பிரச்சினைகள் ஊடகங்கள் வாயிலாகவே உலக நாடுகள் வரை சென்றுள்ளது. மாறாக அவ்வாறு தெரியாது விட்டிருந்தாள் இன்று நாம் செத்து மடிந்திருப்போம்.

வீதிகளில் இறங்கி போராடினாலோ, யாரும் இறந்தாலோ அல்லது யாரையும் கொல்லப்பட்டாலோ தெரியாது அவ்வாறான நிர்கதியான சூழலில் எமக்கு ஊடகங்கள் வேண்டும். அவற்றினை உங்கள் வசப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறாக ஊடகங்கள் ஒடுக்கப்படுமாக இருந்தால் எமது குரலே நசிபட்டுவிடும்  எனவும் தெரிவித்துள்ளார்

53ஆவது ஐ.நா அமர்விலாவது தீர்வு கிடைக்குமா- வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கண்ணீர்.samugammedia தற்பொழுது இடம்பெறும் 53 ஆவது ஐ.நா. அமர்விலாவது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், ஊடகங்கள் ஒடுக்கப்பட்டால் மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு விடும் எனவும் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்பொழுது 53 ஆவது ஐ.நா அமர்வு ஆரம்பித்துள்ளது. அதில் எமது பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகள் இம் முறையாவது  கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.எமது பிள்ளைகள் சரணடைந்து  14 வருடம் ஆகின்றது. ஆயினும் இது வரை எமது நாட்டில் நீதி கிடைக்கப் பெறாமையால்  சர்வதேசத்தினை குறிப்பாக ஐ.நாவை நம்பியுள்ளோம். அதனால் ஐ.நாவை கையெடுத்து கும்பிடுகின்றோம். எமது பிள்ளைகள் எங்குள்ளார்கள் என்பது தொடர்பாக எமக்கு விமோசனம் கிடைக்க வேண்டும். இத்தனை வருடமாக பிள்ளைகளை தேடி அலைந்த  150 ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இறந்து விட்டனர். நாமும்  ஏங்கி தவித்து இறுதியில் மடிந்து விடும்  கட்டத்திலே உள்ள எமக்கு  ஐ.நா எமக்கு ஏமாற்றத்தினை தர கூடாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி  இத்தனை காலமாக வீதிகளில் நின்று அரசாங்கத்தை மண்டியிட்டு கேட்டு  வருகின்றோம். ஆகவே எமது பிரச்சினையை முதலாவதாக கொண்டு தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் எமது பிரச்சினைகள் ஊடகங்கள் வாயிலாகவே உலக நாடுகள் வரை சென்றுள்ளது. மாறாக அவ்வாறு தெரியாது விட்டிருந்தாள் இன்று நாம் செத்து மடிந்திருப்போம். வீதிகளில் இறங்கி போராடினாலோ, யாரும் இறந்தாலோ அல்லது யாரையும் கொல்லப்பட்டாலோ தெரியாது அவ்வாறான நிர்கதியான சூழலில் எமக்கு ஊடகங்கள் வேண்டும். அவற்றினை உங்கள் வசப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறாக ஊடகங்கள் ஒடுக்கப்படுமாக இருந்தால் எமது குரலே நசிபட்டுவிடும்  எனவும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement