தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?
இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை.
மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதி வழங்கியது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.
அதனை விட முக்கியமான கேள்வி, தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா சுமந்திரன் கேள்வி தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமாஇந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை.மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதி வழங்கியது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.அதனை விட முக்கியமான கேள்வி, தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்