• Sep 17 2024

திருமணத்திற்கு தயாரான இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண்! samugammedia

Chithra / Aug 2nd 2023, 9:43 am
image

Advertisement

அவிசாவளை பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்து இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமண தினத்தன்று பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் மோட்டார் வாகனத்தை பரிசோதிப்பதாக கூறி இளைஞனை கடத்தி சென்றுள்ளனர்.

6 மணித்தியாலங்கள் அந்த இளைஞனை தடுத்து வைத்து தாக்கியதுடன், திருமணத்திற்கு புறம்பான உறவு தொடர்பில் தகவல் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண், இராணுவ சிப்பாயின் 50 வயதுடைய தாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இராணுவ சிப்பாயும் கடத்தப்பட்ட இளைஞரும் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாயின் மனைவிக்கு இரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேகநபர்கள் கூறுவதாகவும், கடத்தப்பட்ட இளைஞன் அதற்கு உதவியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட இளைஞனின் கையடக்கத் தொலைபேசியில் இந்த விவகாரம் தொடர்பான பல ஆதாரங்கள் இருப்பதாகவும், அந்த ஆதாரங்களைப் பெறுவதற்காகவே இந்த கடத்தல் இடம்பெற்றதாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞனின் திருமணம் சில தினங்களில் நடைபெற உள்ளதாகவும், திருமண பயணத்திற்கு கார் தருவதாக கூறி இராணுவ சிப்பாய் அழைத்து வந்து இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த இளைஞன் தல்துவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதுடைய இளைஞரை கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் 26 வயதுடையவராகும்.

இவரும் தல்துவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் முல்லைத்தீவில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


திருமணத்திற்கு தயாரான இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் samugammedia அவிசாவளை பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்து இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருமண தினத்தன்று பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் மோட்டார் வாகனத்தை பரிசோதிப்பதாக கூறி இளைஞனை கடத்தி சென்றுள்ளனர்.6 மணித்தியாலங்கள் அந்த இளைஞனை தடுத்து வைத்து தாக்கியதுடன், திருமணத்திற்கு புறம்பான உறவு தொடர்பில் தகவல் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பெண், இராணுவ சிப்பாயின் 50 வயதுடைய தாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இராணுவ சிப்பாயும் கடத்தப்பட்ட இளைஞரும் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இராணுவ சிப்பாயின் மனைவிக்கு இரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேகநபர்கள் கூறுவதாகவும், கடத்தப்பட்ட இளைஞன் அதற்கு உதவியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடத்தப்பட்ட இளைஞனின் கையடக்கத் தொலைபேசியில் இந்த விவகாரம் தொடர்பான பல ஆதாரங்கள் இருப்பதாகவும், அந்த ஆதாரங்களைப் பெறுவதற்காகவே இந்த கடத்தல் இடம்பெற்றதாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.கடத்தப்பட்ட இளைஞனின் திருமணம் சில தினங்களில் நடைபெற உள்ளதாகவும், திருமண பயணத்திற்கு கார் தருவதாக கூறி இராணுவ சிப்பாய் அழைத்து வந்து இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அந்த இளைஞன் தல்துவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதுடைய இளைஞரை கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் 26 வயதுடையவராகும்.இவரும் தல்துவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் முல்லைத்தீவில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபர்களை அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement