• May 09 2024

இலங்கை சட்டத்தரணிக்கு எதிரான வழக்கில் யஸ்மின் சூகா வெற்றி!

Chithra / Dec 14th 2022, 10:23 am
image

Advertisement

தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான யஸ்மின் சூகா இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை சட்டத்தரணி ஜெயராஜ் பலிஹவடனவுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் கட்சிக்கான இங்கிலாந்து பிரதிநிதியாக அண்மைக்காலம் வரை செயற்பட்ட ஜெயராஜ் பலிஹவடன, யஸ்மின் சூகாவுக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.

அதில் யஸ்மின் சூக்கா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவுக்கு சார்புடையவர் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.

அத்துடன் இந்தக் குற்றச்சாட்டின் பிரதிகளை ஜெனீவாவில் உள்ள 47 தூதரங்களுக்கும் அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து, தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தவறான தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக கூறி, ஜெயராஜ் பலிஹவடனவுக்கு எதிராக, யஸ்மின் சூக்கா மனுத்தாக்கல் செய்திருந்தார்

இந்தநிலையில் அந்த அறிக்கைக்காக ஜெயராஜ் பலிஹவடன, யஸ்மின் சூக்காவிடம் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிக்கு எதிரான வழக்கில் யஸ்மின் சூகா வெற்றி தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான யஸ்மின் சூகா இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை சட்டத்தரணி ஜெயராஜ் பலிஹவடனவுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் கட்சிக்கான இங்கிலாந்து பிரதிநிதியாக அண்மைக்காலம் வரை செயற்பட்ட ஜெயராஜ் பலிஹவடன, யஸ்மின் சூகாவுக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.அதில் யஸ்மின் சூக்கா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவுக்கு சார்புடையவர் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.அத்துடன் இந்தக் குற்றச்சாட்டின் பிரதிகளை ஜெனீவாவில் உள்ள 47 தூதரங்களுக்கும் அனுப்பியிருந்தார்.இதனையடுத்து, தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தவறான தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக கூறி, ஜெயராஜ் பலிஹவடனவுக்கு எதிராக, யஸ்மின் சூக்கா மனுத்தாக்கல் செய்திருந்தார்இந்தநிலையில் அந்த அறிக்கைக்காக ஜெயராஜ் பலிஹவடன, யஸ்மின் சூக்காவிடம் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement