• May 22 2024

இலங்கையில் வருட இறுதி நிகழ்வுகள்! - பொலிஸாரின் கடும் எச்சரிக்கை

Chithra / Dec 23rd 2022, 10:59 am
image

Advertisement

வருட இறுதி நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஐஸ் போதைப்பொருள் பாவனையை குறைக்கும் வகையில் இந்த தரப்பினர் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வருடாந்த இறுதி விருந்துகளை நடத்துபவர்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களை பொலிஸார் ஏற்கனவே சேகரித்து வருகின்றனர்.


அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருட இறுதி நிகழ்வுகள் - பொலிஸாரின் கடும் எச்சரிக்கை வருட இறுதி நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஐஸ் போதைப்பொருள் பாவனையை குறைக்கும் வகையில் இந்த தரப்பினர் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வருடாந்த இறுதி விருந்துகளை நடத்துபவர்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களை பொலிஸார் ஏற்கனவே சேகரித்து வருகின்றனர்.அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement