ஒரு கோடி கொடுத்தாலும் தேவையில்லை – தன்மானத் தலைவி தாமரை! ராஜுவுக்கு பயங்கர ஷாக்

250

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தாமரை எவிக்ட் ஆன தகவல்கள் கசிந்த நிலையில், அந்த காட்சியை எபிசோடில் பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் முதல் வாரத்தில் பலூன் உடைக்கும் டாஸ்க் முதல் வாரத்திலேயே தன்னால் விளையாட முடியும் என்பதை நிரூபித்து முதல் வார தலைவியாக மாறியவர் தாமரை.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முந்தைய வாரமான இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி எவிக்ட் ஆகி உள்ளார்.

நிரூப் தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நிரூப்பை செகண்ட் ஃபைனலிஸ்டாக மாற்றி தாமரையை வெளியேற்றி உள்ளனர்.

தாமரை எவிக்ட் என கமல் அறிவித்த நிலையில், ராஜுவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த தாமரை மூத்த மகன் என சொன்னது ராஜுவை நெகிழ வைத்து விட்டது.

தாமரை எவிக்ட் என்கிற அறிவிப்பு ராஜுவுக்கு பயங்கர ஷாக்கிங்காக அமைந்தது அவரது முகம் தெளிவாக காட்டிக் கொடுத்து விட்டது.

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசே ரூ. 50 லட்சம் தான் என்கிற நிலையில், கோடி ரூபாய் கொடுத்தாலும் வெளியே போகமாட்டேன் என சொன்னா தாமரை என பிரியங்கா தாமரையின் வெளியேற்றத்தால் மிகவும் வாடி நின்றார்.

இன்னும் ஒரு வாரத்துக்கு வாய்க்கு ருசியா சமைத்துப் போட ஆளில்லை என்கிற கவலையும் பிரியங்காவுக்கு இருக்கும்.

தாமரை எவிக்ட் என சொன்ன நிலையில், நிரூப் மீது தான் அமீரின் மொத்த கோபமும் இருந்தது.

தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஃபைனலிஸ்ட் ஆக போகவே மாட்டேன்னு கெத்தா சொன்னாங்கா தாமரை என அமீர் பேசியதை கேட்ட ரசிகர்கள் தன்மானத் தலைவி என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.