• Dec 14 2024

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட துயரம் - பறிபோன உயிர்..! - தமிழர் பகுதியில் சம்பவம்

Chithra / Mar 4th 2024, 7:37 pm
image

 

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில்  இன்று  அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில்,

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன் போது மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட துயரம் - பறிபோன உயிர். - தமிழர் பகுதியில் சம்பவம்  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில்  இன்று  அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில்,வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதன் போது மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இளைஞனின் சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement