• Feb 03 2025

வவுனியாவில் தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்த இளைஞன் பரிதாப மரணம்

Chithra / Feb 2nd 2025, 12:56 pm
image

 வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய  சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. 

குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியாவில் தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்த இளைஞன் பரிதாப மரணம்  வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய  சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.இதனால் படுகாயமடைந்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement