அண்மைக்காலமாக பயனர் தரவுகள் கசிவதும் அவை Dark Web போன்ற தளங்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது 4.75 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவை அனைத்தும் Truecaller ஊடாக கசிந்தவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் தகவல்கள் கசியக்கூடிய வகையில் எந்தவிதமான ஹேக்கிங்கும் இடம்பெறவில்லை என Truecaller நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த தகவல்கள் அனைத்தும் சுமார் 1,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையை Cyble நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹேக் செய்யப்பட்ட தரவுகளுள் தொலைபேசி இலக்கங்கள், நகரங்கள், மொபைல் நெட்வெர்க், பாலினம் மற்றும் பேஸ்புக் ஐடி போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here