யாழில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த 10 பேர் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டும் போது சந்தேகநபர்கள் அனைவரும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார்.

அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை