இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்கு எந்த தகுதியும் இல்லாத நபர்களை கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் அனுப்பியுள்ளனர்.
அதனால் குறித்த நபர்கள் அவர்கள் தொழில் புரிந்த இடங்களில் இருந்து தப்பிச்சென்று வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதால், இஸ்ரேலில் விவசாய துறையில் 10ஆயிரம் தொழில் கோட்டா எமது நாட்டுக்கு இல்லாமல் போயுள்ளது.
பணியத்துக்கும் அழுத்தங்களை பிரயோகித்து அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையானவர்களை இவ்வாறு அனுப்பி இருக்கிறார்கள்.
இவ்வாறு செயற்பட்டால் நாடு என்றவகையில் நாங்கள் அவ்வாறு தொழில் சந்தையை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனால் இதுதொடர்பில் நாங்கள் முறையான நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி, இந்த தொழில் கோட்டாவை பெற்றுக்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலில் 10 ஆயிரம் தொழில் கோட்டா இல்லாமல் போகும் நிலை - சிக்கலில் இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இஸ்ரேலில் விவசாய தொழிலுக்கு எந்த தகுதியும் இல்லாத நபர்களை கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் அனுப்பியுள்ளனர். அதனால் குறித்த நபர்கள் அவர்கள் தொழில் புரிந்த இடங்களில் இருந்து தப்பிச்சென்று வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதால், இஸ்ரேலில் விவசாய துறையில் 10ஆயிரம் தொழில் கோட்டா எமது நாட்டுக்கு இல்லாமல் போயுள்ளது.பணியத்துக்கும் அழுத்தங்களை பிரயோகித்து அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையானவர்களை இவ்வாறு அனுப்பி இருக்கிறார்கள். இவ்வாறு செயற்பட்டால் நாடு என்றவகையில் நாங்கள் அவ்வாறு தொழில் சந்தையை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனால் இதுதொடர்பில் நாங்கள் முறையான நடவடிக்கை எடுப்போம்.இதேவேளை அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி, இந்த தொழில் கோட்டாவை பெற்றுக்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.