• Jan 11 2025

நாகை மீனவர்கள் 12 பேருக்கு நிபந்தனையுடன் விடுதலை

Chithra / Jan 9th 2025, 11:10 am
image

 

தடை செய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தது, கடற்படை படகை சேதப்படுத்தியது, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்   இந்திய மீனவர்கள் 12 பேரும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த நவம்பர் 27ம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டி, தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் கடற்படை உத்தியோகத்தர்களை தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் விளக்கமறியலில் மீனவர்கள் 12 பேரும் 2025 ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு மீண்டும்  பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில், மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் இந்திய மீனவ படகு ஓட்டிக்கு 8  மாத கடூழிய சிறையும் ஏனைய 11 மீனவர்களுக்கு ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனை அடிப்படையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார். படகு அரசுடமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நாகை மீனவர்கள் 12 பேருக்கு நிபந்தனையுடன் விடுதலை  தடை செய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தது, கடற்படை படகை சேதப்படுத்தியது, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்   இந்திய மீனவர்கள் 12 பேரும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த நவம்பர் 27ம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டி, தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.ஆனால் கடற்படை உத்தியோகத்தர்களை தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் விளக்கமறியலில் மீனவர்கள் 12 பேரும் 2025 ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.குறித்த வழக்கு மீண்டும்  பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில், மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் இந்திய மீனவ படகு ஓட்டிக்கு 8  மாத கடூழிய சிறையும் ஏனைய 11 மீனவர்களுக்கு ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனை அடிப்படையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார். படகு அரசுடமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement