• Nov 28 2024

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்து அசத்திய 13 இலங்கையர்கள்…!

Tamil nila / Mar 8th 2024, 7:51 am
image

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணவு தயாரிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.

இந்த 13 சமையல்காரர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை நவீன முறைகளில் தயாரித்து பரிமாறியுள்ளனர். 

உணவுகளை உட்கொண்ட வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துக்கள், கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த 13 பேரும்  அம்பானி வீட்டு விசேஷத்தில் சமைப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடந்த மார்ச் 3 ஆம் திகதியன்று திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு மதிய உணவு தயாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

 இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் “ஜாம்” நகரில் உள்ள அம்பானிக்கு சொந்தமான தனியார் உயிரியல் பூங்காவிலேயே இந்தத் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.


அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்து அசத்திய 13 இலங்கையர்கள்… இந்தியாவின் கோடீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணவு தயாரிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.இந்த 13 சமையல்காரர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை நவீன முறைகளில் தயாரித்து பரிமாறியுள்ளனர். உணவுகளை உட்கொண்ட வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துக்கள், கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த 13 பேரும்  அம்பானி வீட்டு விசேஷத்தில் சமைப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு கடந்த மார்ச் 3 ஆம் திகதியன்று திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு மதிய உணவு தயாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் “ஜாம்” நகரில் உள்ள அம்பானிக்கு சொந்தமான தனியார் உயிரியல் பூங்காவிலேயே இந்தத் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.இந்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement