புத்தாண்டு காலத்தில் இயக்கப்படும் பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளை மரியாதை குறைவாக நடத்துதல், வேகமாக பேருந்துகளை இயக்குதல் போன்றவை தொடர்பில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த அனைத்து முறைப்பாடுகள் மீதான விசாரணையும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 1955 என்ற துரித எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்களை கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதற்காக, 21 ஆம் திகதி வரை சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பேருந்து சேவைகள் தொடர்பில் 143 முறைப்பாடுகள் விரைவில் விசாரணை புத்தாண்டு காலத்தில் இயக்கப்படும் பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளை மரியாதை குறைவாக நடத்துதல், வேகமாக பேருந்துகளை இயக்குதல் போன்றவை தொடர்பில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அந்த அனைத்து முறைப்பாடுகள் மீதான விசாரணையும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 1955 என்ற துரித எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகைக் காலத்தில் தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்களை கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதற்காக, 21 ஆம் திகதி வரை சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.