• Sep 08 2024

அந்தமான் கடலில் தத்தளிக்கும் 160 ரோஹிங்கியா அகதிகள்:வேறு நாட்டில் தஞ்சமடைய முயற்சி?

Sharmi / Dec 10th 2022, 10:10 pm
image

Advertisement

வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களிலிருந்து படகில் வெளியேறிய சுமார் 160 ரோஹிங்கியா அகதிகள் படகின் இயந்திர கோளாறு காரணமாக அந்தமான் கடல் பகுதியில் தத்தளித்து வருகின்றனர். உணவு மற்றும் குடிநீரின்றி கடந்த சில நாட்களாக இவர்கள் தத்தளித்து வருவதாகக் கூறப்படுகிறது. 


படகில் இருந்த ஓர் அகதி ரோஹிங்கியா மனித உரிமைகள் முன்னெடுப்பு (RHRI) எனும் அமைப்பை தொடர்புக் கொண்டிருக்கிறார். அதன்படி இந்தோனேசியாவை நோக்கிச் செல்லும் அந்தமான் கடல் பகுதியில் அகதிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. 


“கடல்வழியாக செல்லக்கூடிய அகதிகளுக்காக செயல்பட்டு வரும் அனைத்து அமைப்புகளிடமும் இந்த மக்களுக்கு உதவ முயற்சிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்,” எனக் கூறியிருக்கிறார் ரோஹிங்கியா மனித உரிமைகள் முன்னெடுப்பு அமைப்பின் இயக்குநர் சபீர் கியாவ் மின். 


இந்த படகில் உள்ள அகதிகளில் 120 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 40 பேர் ஆண்கள் என்றும் சொல்லப்படுகிறது. 



அதே சமயம், இப்படகு மலேசிய கடல் பகுதி இருப்பதாக தி கார்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இப்படகு கடந்த நவம்பர் 25ம் தேதி வங்கதேசத்திலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. 



இந்த அகதிகள் பாதுகாப்பாக கரை சேருவதற்கு மலேசியாவை அவசரமாக அனுமதிக்க வேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 



வங்கதேச முகாம்களில் நிலவி வரும் மோசமான சூழ்நிலை மற்றும் மியான்மரில் தொடரும் ராணுவ ஒடுக்குமுறை காரணமாக மலேசியா அல்லது இந்தோனேசியா போன்ற நாடுகளில் படகு வழியாக தஞ்சமடைய ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 



ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் கூற்றுப்படி, படகு வழியாக பயணிக்கும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை அச்சம் தரும் வகையில் இந்தாண்டு அதிகரித்து இருக்கிறது. இந்தாண்டின் கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி, இதுவரை 1,900 பேர் (பெரும்பாலும் ரோஹிங்கியாக்கள்) மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெளியேறியிருக்கின்றனர். கடந்தாண்டு படகில் வெளியேற முயன்றவர்களின் எண்ணிக்கை வெறும் 287 ஆக உள்ளமை தற்போதைய சூழலின் தீவிரத்தை உணர்த்தக்கூடியதாக உள்ளது. மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு படகில் செல்லும் முயற்சிகளில் இந்தாண்டு இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. 

அந்தமான் கடலில் தத்தளிக்கும் 160 ரோஹிங்கியா அகதிகள்:வேறு நாட்டில் தஞ்சமடைய முயற்சி வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களிலிருந்து படகில் வெளியேறிய சுமார் 160 ரோஹிங்கியா அகதிகள் படகின் இயந்திர கோளாறு காரணமாக அந்தமான் கடல் பகுதியில் தத்தளித்து வருகின்றனர். உணவு மற்றும் குடிநீரின்றி கடந்த சில நாட்களாக இவர்கள் தத்தளித்து வருவதாகக் கூறப்படுகிறது. படகில் இருந்த ஓர் அகதி ரோஹிங்கியா மனித உரிமைகள் முன்னெடுப்பு (RHRI) எனும் அமைப்பை தொடர்புக் கொண்டிருக்கிறார். அதன்படி இந்தோனேசியாவை நோக்கிச் செல்லும் அந்தமான் கடல் பகுதியில் அகதிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. “கடல்வழியாக செல்லக்கூடிய அகதிகளுக்காக செயல்பட்டு வரும் அனைத்து அமைப்புகளிடமும் இந்த மக்களுக்கு உதவ முயற்சிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்,” எனக் கூறியிருக்கிறார் ரோஹிங்கியா மனித உரிமைகள் முன்னெடுப்பு அமைப்பின் இயக்குநர் சபீர் கியாவ் மின். இந்த படகில் உள்ள அகதிகளில் 120 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 40 பேர் ஆண்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம், இப்படகு மலேசிய கடல் பகுதி இருப்பதாக தி கார்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இப்படகு கடந்த நவம்பர் 25ம் தேதி வங்கதேசத்திலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அகதிகள் பாதுகாப்பாக கரை சேருவதற்கு மலேசியாவை அவசரமாக அனுமதிக்க வேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச முகாம்களில் நிலவி வரும் மோசமான சூழ்நிலை மற்றும் மியான்மரில் தொடரும் ராணுவ ஒடுக்குமுறை காரணமாக மலேசியா அல்லது இந்தோனேசியா போன்ற நாடுகளில் படகு வழியாக தஞ்சமடைய ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் கூற்றுப்படி, படகு வழியாக பயணிக்கும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை அச்சம் தரும் வகையில் இந்தாண்டு அதிகரித்து இருக்கிறது. இந்தாண்டின் கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி, இதுவரை 1,900 பேர் (பெரும்பாலும் ரோஹிங்கியாக்கள்) மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெளியேறியிருக்கின்றனர். கடந்தாண்டு படகில் வெளியேற முயன்றவர்களின் எண்ணிக்கை வெறும் 287 ஆக உள்ளமை தற்போதைய சூழலின் தீவிரத்தை உணர்த்தக்கூடியதாக உள்ளது. மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு படகில் செல்லும் முயற்சிகளில் இந்தாண்டு இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement