பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள் இருப்பதாகத் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தர்.
தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியுள்ளார்.
அதன்படி, பொலிஸ் சேவையில் 5,000 வெற்றிடங்களை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5,000 கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், விசாரணையிலுள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் பிரிவில் 28,000 வெற்றிடங்கள்; 5,000 பொலிஸாரை உடன் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள் இருப்பதாகத் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இன்று (08) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தர். தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியுள்ளார்.அதன்படி, பொலிஸ் சேவையில் 5,000 வெற்றிடங்களை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5,000 கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.இதற்கிடையில், விசாரணையிலுள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.